இந்திய துணைத்தூதரகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி யாழ் முஸ்லீம்களுடன் சந்திப்பு
பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி  எஸ் பாலச்சந்திரன் யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலிற்கு நேற்று(25) விஜயம் செய்துள்ளார்.

இதன் போது இவரை பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் மெக்ஸா முபீன் வரவேற்றதுடன் எம் எஸ் முஹம்மத் மௌலவியிடம்  அதிகாரி  எஸ் பாலச்சந்திரன்  ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

இந்ந நிகழ்வில் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான கே.எம் நிலாம் எம்.எம் நிபாஹீர் முன்னாள் மாநகர உறுப்பினரான சரபுல் அனாம் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.எல் லாபீர் சமாதான நீதவான் இக்பால் இணைந்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...