(அகமட் எஸ். முகைடீன்)  

2018 சீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி மற்றும் சீனா குவாங்சி வர்த்தக நாமம் பட்டுப்பாதை தொடர் கண்காட்சி ஆரம்ப நிகழ்வு நேற்று (18) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்றது.

இவ்வாரம்ப நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

மேலும் இதன்போது குவாங்சி மாநில வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் டையோ வீஹொங், அத்திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மா ஜிக்சியன் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  

இக்கண்காட்சியில் சீன நாட்டின் குவாங்சி மாநிலத்திலுள்ள 60 வதுக்கும் மேற்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Share The News

Post A Comment: