தீ விபத்தில் 9 கடைகள் தீக்கிரை

Image result for fire

மொனராகல – பொத்துவில் பாதையின் அருகில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 கடைகள் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியோடு குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 15 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கடைத்தொகுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...