கோத்தபாய மீது அச்சத்தில் மங்கள!

Image result for மங்கள சமரவீர


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தனக்கு பயம் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கோத்தபாய மீது அனைவருக்கும் பயம் இருக்க வேண்டும் என, நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மங்கள குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் கோத்தபாவுக்கு தொடர்பு உள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச உத்தரவு வழங்கியிருந்தார் இதன் காரணமாக தான் அவர் கடும் பயம் உள்ளதாக மங்கள குறிப்பிட்டுள்ளார்.

தான் உட்பட அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதனை நிறுத்திவிட்டு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்து காட்டுமாறு அமைச்சர் கூறியுள்ளார்.

போலி செய்திகள் மற்றும் போலி ஆவணங்களின் பின்னால் உள்ள உண்மைத்தன்மை தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தை சிரமங்களுக்கு உள்ளாக்குவதற்காக பல விடயங்களை ஊடகங்களில் முன்வைப்பதற்கு கோத்தபாய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மங்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தபாய மீது அச்சத்தில் மங்கள! கோத்தபாய மீது அச்சத்தில் மங்கள! Reviewed by NEWS on May 23, 2018 Rating: 5