ஏ.எல்.றமீஸ்

அட்டாளைச்சேனையை நகர சபையாக தரமுயர்த்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன், அதுமாத்திரமின்றி அதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட அனைவரும் செய்ய வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்,

தைக்காநகர் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற மின்னொளி ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டார்,

பல்கலைக்கழகம், தேசிய கல்வியல் கல்லுாரி, துறைமுகம் என அனைத்தையும் கொண்ட அழகிய பிரதேசம் அட்டாளைச்சேனையாகும், பலவருடங்களாக இது பிரதேச சபையாக இருந்து வருகிறது, இதற்கு பக்கத்துவீட்டில் இருந்த பல சபைகள் தரமுயர்த்தப்பட்டது, ஆனால் குரோத மனப்பாங்கு அரசியல்வாதிகள் இதனை மாற்று கண்கொண்டு பார்த்தனர். அப்படி முஸ்லிம் காங்கிரஸ் பார்க்காமல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என்றார். நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரேஹித போகொல்லாகம, பிரதியமைச்சர் அலிசாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share The News

Post A Comment: