அம்பாரையில் நடந்த கலவரம் தொடர்பாக சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் துலீப் குமாநாயக்க ஆவார். கடந்த சில மாதங்களாக ICCPR சட்டத்தின் கீழ் இவர் விளக்க மறியலில் உள்ளார்.
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) சார்பாக போட்டியிட்டு அம்பாரை நகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். விளக்க மறியலில் இருக்கும்போதே அம்பாரை நகர சபையின் பிரதித் தவிசாளராக இவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
காசிம் ஹோட்டல் தாக்குதல் வழக்கில் ஏனையோரோடு சேர்த்து இவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 05 வழக்குகளிலும் இவருக்கெதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அம்பாரை பள்ளிவாசல் தாக்குதலும் அடங்கும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இவர் இருக்கும் கட் அவுட்டை அம்பாரை நகர சுற்று வட்டத்திற்கருகே காணலாம்.
சிறாஜ் மஸூர்

Share The News

Post A Comment: