தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 11, 2018

தைவான் நாட்டை சுற்றிவளைத்து சீனா போர் விமானங்கள் திடீர் போர் ஒத்திகை

தைவான் நாட்டை சுற்றிவளைத்து சீனா போர் விமானங்கள் திடீர் போர் ஒத்திகை

தைவான் நாட்டை சுற்றிவளைத்து சீன போர் விமானங்கள் திடீர் என போர் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தைவான் நாடு தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக ட்சாய் ல்ங் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனாவின் அழுத்தம் அதிகரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக  சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், சீன ராணுவத்தின் எச்-6கே ரக குண்டு வீசும் விமானங்கள் மற்றும்  எஸ்யு-35 ரக போர் விமானங்கள் இன்று தைவான் நாட்டை  சுற்றி வளைத்து போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்த ஒத்திகையால் தைவானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டை மிரட்டும் தொனியில் கடந்த வருடமும் சீனா இதை போன்றே போர் ஒத்திகையில் ஈடுபட்டது. 

சீன ராணுவம் அதன் போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நவீன ஏவுகனைகள் ஆகியவற்றை உலக தரத்திற்கு ஏற்ப வேகமாக தரம் உயர்த்தி வருகிறது. ஆனால், தைவான் ராணுவம் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களை மட்டுமே தன்வசம் வைத்துள்ளது. எனவே, சீனாவிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் நவீன ஆயுதங்களை இன்னும் அதிகளவில் அமெரிக்கா வழங்க வேண்டும் என தொடர்ந்து தைவான் அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages