மாலைதீவின் முன்னாள் இஸ்லாமிய விவகார அமைச்சர் கொழும்பில் காலமானார்

 Related image

மாலைதீவின் முன்னாள் இஸ்லாமிய விவகார அமைச்சரும் பிரபல மார்க்க அறிஞருமான கலாநிதி அப்துல் மஜீத் அப்துல் பாரி நேற்று இரவு கொழும்பில் காலமானார்.

55 வயதான இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

குர்ஆன் விளக்கம் (தப்ஸீர்) தொடர்பில் கலாநிதிப்பட்டம் பெற்ற முதலாவது மாலைதீவு பிரஜை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று லுஹர் தொழுகையை அடுத்து கொழுப்பு, ஜாவத்தை மையவாடியில் இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஜனசாவில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் நஷீத் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...