கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் தீ!http://www.dailyceylon.com/wp-content/uploads/2018/05/20180522_140120.jpg

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபை மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை தீயணைப்பு பிரிவு, வைத்தியாசாலையின் சுகாதார உத்தியோகதர் மற்றும் உள்ளுர்வாசிகளின் உதவியுடன் உயிர் சேதங்கள் ஏற்படாத நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.என்.எம். அப்ராஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...