பைஷல் இஸ்மாயில்

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று (14) குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஜே.நெளபல் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இவ்வாண்சுக்கான தாதிகளின் உறுதிமொழியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி ஓய்வுபெற்றச் சென்ற தாதி உத்தியோகத்தர்களான எஸ்.சதாசிவம், ஏ.மஹ்ரூப், ஏ.அந்தோணிப்பிள்ளை ஆகியோர்களின் சேவையைப் பாராடிய ஞாபகச் சின்னங்களும் தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில் பிரதம அதியாக திருமதி அலோசியஸ் மற்றும் கலாநிதி எஸ்.சுஜேந்திரன் ஆகியோருக்கும் தாதி சங்கத்தின் சார்பில் ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கப்படது.

Share The News

Post A Comment: