இரத்தினபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!
இன்று 20.05.2018 இரத்தினபுரியில் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இன்று 20.05.2018கலை முதல் இரவு வரை தொடர்ந்தும் மழை பெய்த வண்ணம் இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். 

கடந்த ஆண்டு நோன்பு முதல் நாள் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் நோன்பினை கஷ்டத்துக்கு மத்தியில் நோற்றுக்கொண்டனர் இன்று 20.05.2018பெய்யும் மழையில் களுகங்கை நீர்மட்டம் உயர்வடைந்தும் கணப்படுவதோடு. கொடிகமுவ, பண்டரவத்தை மற்றும் சில பிரதேசங்களில் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவுள்ளதோடு மக்கள் தேவையான பொருட்களை அகற்றி கொண்டு இருக்கினறனர்.

அனைத்து மக்களும் துஆவுடன் இருக்கும்படி இரத்தினபுரி மக்கள் வேண்டிக்கொள்கின்றனர்
எம் எம் எம் நுஸ்ஸாக்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...