அமெரிக்கவுக்கு வாய்ப்பு வழங்கிய இலங்கை!

Image result for america with sri lanka

அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றில் இருந்து 48 மில்லியன் டொலர்கள் பெறுமதியான புகையிரத இயந்திரங்கள் தருவிக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் 12 இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய பல நாடுகள் முன்வந்தபோதும், இறுதியாக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகையிரத இயந்திரங்கள், ஒவ்வொன்றும் 3000 குதிரை சக்தியை கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...