அடுத்த ஞானசார சச்சிதானந்தம்; இலங்கை முஸ்லிம்களை வெளியேற உத்தரவிட இவர்யார்?இது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி. இங்கே வாழ்வதானால் எங்கள் மரபுகளை பேணி வாழுங்கள் இல்லை எனில் இங்கிருந்து வெளியேறுங்கள் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ,தென்மராட்சியில் மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டம் துவக்கிவைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் யாழ் நாகவிகாரை விகாராதிபதி மிகஹஜன்துரே விமலதேர்ர் நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்
பொதுபலசேனா அமைப்பு ஹலாலுக்கு எதிராக போராட்டம் நடாத்தியே நாட்டில் பல இனவாத செயற்பாடுகளை தோற்றுவித்தார்கள், அதே பாணியில் ஆரம்பித்து சிவசேனை அமைப்பை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...