யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு  கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம்
கல்லுரி வீதி ஜின்னா வீதி மற்றும்  ஹலீமா ஒழுங்கை  ஆகியவற்றை இணைக்கும்  பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்க முன்னாயத்தங்கள் செய்யப்பட்டு வருவதை அறிந்த மக்கள் அதை  எதிர்த்து போராட்டம் ஒன்றை நடாத்தினர்.இதன் போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்மாணிப்பு உரிமையாளர் தாம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் எனவும் நீங்கள் என்ன தான் செய்தாலும் ஹோட்டல் கட்டியே தீருவேன் செய்வதை பாருங்கள் என மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை புகைப்படம் எடுத்து அவ்விடத்தில் இருந்து நகர்ந்துள்ளார்.மேற்படி ஹோட்டல்  நிறுவன தலைவர் என்று சொல்லப்படும் நபர் கூட தற்போது  தலைமறைவாகவே இருந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக  சட்டவிரோத காணி அபகரிப்பு காசோலை மோசடி வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு  உள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: