வாஹிட் ஆசிரியர் மீது தாக்குதல்! நடவடிக்கை எடுக்குமா மு.கா உயர்பீடம்முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் முக்கியஸ்தர் வாஹிட் ஆசிரியர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வேளையில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது, இது வரை இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையென அட்டாளைச் சேனை மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற சிறப்பு சந்திப்பிலே மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சம்பவத்திற்கு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் இதற்கு பின்னால் பிரதியமைச்சர் ஒருவர் இருந்துள்ளதாகவும், இன்னும் சிலர் முன்னாள் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். எது எவ்வாறாக இருந்தாலும் கட்சியின் தலைவர் இதுவரை எந்திவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்தனர். எதிர்வரும் றமழான் பிறை 10் இப்தார் நிகழ்வு மிக பிரமாண்டமாக அட்டாளைச்சேனையில் இடம்பெறவுள்ளது இதற்று பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார். இதன்போது இதுபற்றி விலாவாரியாக பேசப்படும் என அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர் லத்தீப் எமது இணையதளத்திடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...