எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.
திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பத்து நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாணந்துறை மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளில் மோசடி இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share The News

Post A Comment: