என்னை தலைவரிடமிருந்து பிரிக்க குறுமனது அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் சதிதேசிய காங்கிரஸ் தவைர் ஏ.எல்.எம் அதாஉல்லாவிடமிருந்து என்னை பிரிக்க குறு மனது கொண்ட அரசியல்வாதிகளும், சில பொய்பரப்பும் ஊடகவியலாளர்களும் சதி செய்வதாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீஸ் குறிப்பிட்டார்,

அக்கரைப்பற்றை சேர்ந்த  ஒரு ஊடகவியலாளர் அனுப்பிய செய்தியை எமது தளம் பிரசுரித்திருந்தது, ஊடகவியலாளர்கள செய்தியனுப்பினால் பதிவிடுவது வழமை, ஆனால்  செய்தி பொய்யானது என க்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

எனக்கும் தலைவருக்குமான உறவு என்பது மிக நீண்டது, அதனை தலைவர் அறிவார் நான் அவர் அருகில் இருப்பதை சிலர் விரும்புவது இல்லை அவர்களே சில கூலி ஊடகவியலாளர்களை வைத்து செய்திகள் எழுதி இணையங்களுக்கு அனுப்புகின்றனர்.

தேசிய காங்கிரஸ் என்பது எனது இதயத்தின் நாடி போன்றது, அதில் இருந்து விலகிச் செல்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். வெட்டுண்டாலும் துண்டானாலும் எனது போராட்டம் இங்குதான்., இங்குதான் ஆரம்பித்தேன் இங்குதான் இருப்பேன் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...