பதவி விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி!ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான நவாவி, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிக்கு வழங்கப்படும் கோட்டாவுக்கு அமைய தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாகவே நவாவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை தாம் பதவி விலகியமை குறித்து எந்த கருத்துக்களை வெளியிட முடியாது என நவாவி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்