அழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன்!

Related image

கடந்த வாரம் தாம் ஈரானுக்கு மேற்கொண்ட விஜயத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதனை புறக்கணித்து தாம் அங்கு சென்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் ஈரானுக்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

எனினும், எங்கிருந்து தமக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்றபோதும் அந்த நாடுகளுக்கு செல்லவேண்டாம் என்று தம்மிடம் கேட்கப்படடதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில் அதற்கு எந்த நாட்டுடனும் உறவைப்பேண முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...