May 26, 2018

நுண்கடன் திட்டங்களால் அழிவடையவுள்ள சமூகம்; அவதானம் வேண்டும்கடந்த மூன்று ஆண்டுகளில் காலி கிந்தோட்டை, போர்வை, மீ எல்ல ஆகிய பிரதேச உறவினர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் கலந்துரையாடல்களில் இனங்காணப்பட்ட ஓர் பிரச்சினைதான் நுண்கடன் ஒப்பந்தங்களில் முஸ்லிம் பெண்கள் கைச்சாத்திடுவதாகும். ஆனால் இது மேற்படி மூன்று கிராமங்களுக்கு மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல நாடளாவிய ரீதியில் பல தற்கொலைகளுக்கும் காரணமான ஓர் பிரச்சினையாகும்.
நுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை என்பவற்றால் 2018 இல் முதல் நான்கு மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளது.
கிராமிய பொருளாதரத்தை இவ்வாறு நுண்கடன் வட்டி மூலம் சீரழிக்க கடந்த அரசு அறிமுகப்படுத்திய விடயமே திவிநெகும ஆகும். இது பற்றி கள ஆய்வு செய்த போது குறித்த கிராமத்தில் முதல் சமூர்த்தி அதிகாரியாக இருந்தவர் இக்கடன் திட்டங்களை அவ்வூர் மக்களின் நலன் கருதி அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கவில்லை. ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட திவிநெகும அதிகாரி இவற்றை கிராமத்தில் ஊக்குவித்த வண்ணமுள்ளார். இதனால் பிரதேசத்தில் மக்கள் நாளுக்கு நாள் வட்டியை நோக்கி சென்ற வண்ணமுள்ளனர்.
இன்று முஸ்லிம் கிராமங்களை இலக்காக பல புதிய கிராமங்களில் திறக்கப்படுவதை நம்மால் அவதானிக்க முடிந்தது.
நுண்கடன் திட்டங்களை பலவகைகளில் பல (Samoordhi, Sanasa) கிராமிய வங்கிகள் அறிமுகப்படுத்திய வண்ணமுள்ளது. அதில் ஓர் முறைதான் ஒருவருக்கு 10, 000.00 கடன் தேவைப்படும்போது குறித்த வங்கி 9ரூபாவை வழங்கிவிட்டு (வாரநாட்களில்) 2 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 1ரூபா வீதம் அறவிடுகின்றனர்.
இஸ்லாம் கடுமையாக எச்சரித்து தன்னுடன் போருக்கு அழைக்கின்ற ஓர் பவம் இருப்பதென்றால் அது வட்டி மாத்திரமாகும்.
 நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்.(2:278)
இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிடில் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள். ஆயினும்நீங்கள் (வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி) பாவமன்னிப்பு கோரினால்உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு. (எவரும் அதை எடுத்துக்கொண்டு) உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது. (அவ்வாறே) நீங்களும் (வட்டி வாங்கி) அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்! (2:279)
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோஅவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கிவட்டியை ஹராமாக்கியிருக்கிறான்ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோஅவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறதுஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

இவ்வாறு முஸ்லிம் கிராமங்களில்  நாளுக்கு நாள் வட்டிக்கு கடன் பெரும் வீதம் அதிகரிக்கும் என்றால் நமது கிராம மக்களுடன் அல்லா ஹ் போருக்குத்தான் வருவான். அது வெள்ளமாகவும் இருக்கலாம் அல்லது இனவாத தாக்குதலாகவும் அமையலாம். எனவே நிச்சியமாக நாம் இன்னொரு அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளோம். எனவே இதற்கு தீர்வை முன்வைக்க வேண்டும்.
அவ்வகையில்  இவற்றுக்கு தீர்வை இஸ்லாமே முன்வைத்துள்ளது. அதுதான் ஸதக  மற்றும்  கூட்டு ஸகாத் ஆகும்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(2:276)
இது வெறும் ஓர் கடமை மாத்திரமல்ல. இஸ்லாமிய முதலீட்டுத் திட்டமாகும். இதன் இலக்கு சமூகத்தின் வறுமையை குறைத்து பொருளாதரத்தை அபிவிருத்தியடையச் செய்வதாகும்.
அல்குர்ஆனில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்து பேசுகின்ற ஓர் இபாதத் ஸகாத் ஆகும்.
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்(2:43).
இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள ஸதக அனைவருக்கும் வழங்கலாம். ஆனால்  ஸகாத் குறிப்பிட்ட எட்டு கூடதினருக்கே வழங்க வேண்டும்.
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்ஏழைகளுக்கும்தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்கடன் பட்டிருப்பவர்களுக்கும்அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன்மிக்க ஞானமுடையோன்.(9:60)
ஸகாத் பெற தகுதியான எட்டு கூடங்களில் ஓர் கூட்டம் ஸகாத்தை வசூலிக்கும் ஊழியர் எனவே ஸகாத்தும் ஓர் கூட்டுக் கடமை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. ஆனால் இன்று அது தனியாகத்தான் நிறைவேற்றப்படுகின்றது.
இலங்கையில் கூட்டு ஸகாத் கடமைகளில் ஈடுபடும் ஓர்  அமைப்பே பைத்துல் மால் அமைப்பாகும். இவ்வமைப்பு கடந்த காலங்களில் தமது சில வேலைத்திட்டங்களை மீ எல்ல மற்றும் போர்வையில் அறிமுகப்படுத்தினர். என்றாலும் கூட்டு ஸகாத்தின் மூலம் அடைய வேண்டிய இலக்கு இரு இடங்களிலும் முழுமையாக அடியவில்லை. இதற்கான காரணம் போதியளவு வழிகாட்டல் மற்றும் மீள்மதிப்பீடுகள் நடாதப்படாமையாகும்.


முஸ்லிம் சமூகத்தின் கிட்டிய எதிர்காலத்தில் நுண் கடனால் பாதிக்க முன் பொருளாதரத்தை சீரமைக்க கூட்டு ஸகாத்தை கடனை அடைக்கவும், உயர் கல்விக்காகவும், சுய தொழில் ஆரம்பிக்கவும் வழங்குவது  பற்றி சிந்திப்போம்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network