இலங்கையின் பிரபல ஆடைக்களஞ்சியமான ஹமீதியாஸ் ஆடைக் காட்சியறைத் தொகுதியின் களஞ்சியசாலை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இரத்மலானை, பொருப்பனை பிரதேசத்தில் அமைந்திருந்த ஹமீதியாசின் பாரிய களஞ்சியத் தொகுதியே இவ்வாறு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்களின் சதிவேலையா என்பது குறித்து எதுவும் கூற முடியாதிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹமீதியாஸ் ஆடைக்காட்சியறைத் தொகுதியின் பிரதான களஞ்சியம் மட்டுமன்றி தலைமையகம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளும் இங்குள்ள கட்டிடத்திலேயே இயங்கி வந்துள்ளது.

அந்த வகையில் இந்த தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட சேதம் பல நூறு மில்லியன்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது

கடந்த வருடம் புனித ரமழான் மாதத்தை அண்மித்த காலப்பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டும், தாக்குதல் நடாத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவுமில்லை. அத்துடன் மேற்குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளைத் தொடர அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: