தொகுப்பு : ஸிப்னாஸ் ஹாமி (இறக்காமம்)

உளவியல் என்றால்.

“மனித நடத்தை பற்றிக் கற்கும் ஒரு விஞ்ஞானம் எனக்குறிப்பிட முடியும்” சகல மனித செயற்பாடுகளையும் நடத்தை எனக் குறிப்பிடலாம். நடத்தல், பேசுதல், வெட்டுதல் போன்ற உடற்செயற்பாடுகளையும். உணர்த்தல், கிரகித்தல், ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்று அறிவுசார் செயற்பாடுகளையும். போபம், பயம், அன்பு, வெறுப்பு போன்ற மனவெழுச்சி செயற்பாடுகளையும் உள்ளடக்கிய சகல நடத்தைகளையும் கற்றும் ஒரு விஞ்ஞானமாக இப்பாடநெறி கருதப்படுகின்றது.

உளவியல் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 1. கல்வி உளவியல் 
 2. குழந்தை/பிள்ளை உளவியல்
 3. சமூக உளவியல்
 4. பிரயோக உளவியல்
 5. விலங்கு உளவியல்
 6. அபிவிருத்தி உளவியல் 
 7. இளைஞர் உளவியல்
 8. வளர்ந்தோர் உளவியல் 
என பல்வேறு வகைப்படுத்த முடியும்

கல்வி உளவியல் 

கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் முறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடத்தையைப் பற்றி முறையாக ஆராய்வது ஆகும்.  மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள்,ஓடுதல், நடத்தல் போன்ற உடலியக்கச் செயல்கள், மனச் செயல்பாடுகளான மகிழ்ச்சி, வருத்தம்,கோபம் போன்றவற்றையும் குறிக்கும்.

இதனை வரையரை செய்யும் போது. 
“உளவியலில் இடம் பெற்றுள்ள நுட்பமுறைகளை கொண்டு வகுப்புச் செயல்களையும், சமூக வாழ்க்கையையும் கற்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தல் என்றார் ( Grinder-1981,Rifford-1984)

கல்வி உளவியல் பிரதானமாக கற்றில்-கற்பித்தல் செயன்முறைகளை விளங்கிக் கொள்வதற்கும் அச்செயல்களை விருத்தி செய்வதற்குமான நுட்பமுறைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வழிகாட்டுகின்றது  என்றார் (Woolfolk)

“கல்வி உளவியல்” கற்பவர் (Learner) , கற்றல் செயல்முறை (Learning Process), கற்றல் சந்தர்ப்பங்கள் (Learning Situation) ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியது. (Lindgren-1980)

இது மனதின் நனவு நிலை, நனவற்ற நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.  கல்வி உளவியல் மாணவர்களின் வெளிப்படையான நடத்தையும், ரகசிய நடத்தையும் குறிக்கும்.  மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நடத்தையும் குறிக்கும். நடத்தையை நேர்முகமாக வளர்க்கக் கூடிய அறிவியல் தான் கல்வி உளவியலாகும்.  கல்வி உளவியலானது வருவது உரைத்தல், திருத்தம் செய்தல், போன்ற நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே கல்வி உளவியல் என்பது கற்றல்-கற்பித்தல் போன்றவற்றை விவரிக்கின்ற உளவியலின் ஒரு பகுதியாக இருக்கிறது.

கற்பவரைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பற்றி பல வழிகளிலும் அறிந்து கொள்ள முடியும்.  ஆசிரியர் மாணவரின் ஆர்வங்கள், மனப்பான்மை, மனச்செயல்பாடுகள் மற்றும் இயற்கையாகவே வளர்த்துக் கொண்ட திறமைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.  ஆசிரியர் மாணவரின் உடல், அறிவு, உணர்ச்சி, அவர்களுடைய தேவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். மாணவரின் ஊக்கப்படுத்தும் நடததையைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.

பாடப் பொருளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்குபடுத்துதல்

ஆசிரியர் மாணவர்களின் நடைமுறைத் தேவைகள், திறைமைகள் போன்றவற்றிற்கு தகுந்தாற்போல் பாடப் பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும். கற்றல் - கற்பித்தல் நுணுக்கதை தெரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு மாணவனுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அதாவது நல்ல காற்றோட்ட வசதி, படிப்பதற்கு தேவையான நல்ல வெளிச்சம் அமர்நது படிப்பதற்குத் தேவையான இருக்கைகள் மற்றும் ஒரு மாணவன் அமர்நது படிக்கும் இடம் துய்மையாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.

மரபு, சூழல் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல், கட்டுப்பாட்டை பராமரிக்க உதவி செய்தல் போன்றவற்றை செயல்படுத்துதல் வேண்டும். மாணவர்களைப் பற்றி ஆசிரியர்களுக்கு நன்றாகத் தெரியும்.  அவர் மாணவர்களின் ஆர்வங்கள், மனப்பான்மைகள், திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

கல்வி உளவியல் மூலம் கிடைக்கப்பெறும் பயன்பாடுகள்.

 1. சதாரண மற்றும் அசாதாரண பிள்ளைகளின் இயல்புகளை விளங்கிக் கொண்டு கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.
 2. மாணவனின் மனவெழுச்சி பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு மாணவர்களை வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்த முடியும்.
 3. கல்விக் கொள்கைகள் அதன் முறைமைகளை அறிந்து பிள்ளைகளுக்கான கற்பித்தல் முறையை ஒழுங்கு படுத்துவதுடன். திறமையான ஆசிரியராக செயற்படலாம்.
 4. பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அப்பிரச்சினையிலிருந்து விளகிக் கொள்வதறாகன ஆலோசனைகளைக் கூறலாம்.
 5. தனியாட்களின் வேறுபாடுகளை அறிந்து அவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
 6. கற்றல்-கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் தன்னை மதிப்பீடு செய்வதுடன் மாணவர்களையும் மதிப்பீடு செய்து மீளவலியுத்த வேண்டிய விடையங்களை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிப்பார்.
 7. மாணவர்களை அதகமாக கற்றல் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுத்துபவர்களாக திகழ முடியும்.
இவ்வாறு கல்வி உளவியலான பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. அது பற்றிய தெளிவை ஆசிரியர்கள் கொண்டிருக்கும் போது தங்களுடைய கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளிள் சிறப்பாக ஈடுபட முடியும்.

துணை :

Share The News

Post A Comment: