கிண்ணியா நகர பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்


ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியா ஷூறா சபை, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை என்பன இணைந்து கிண்ணியா நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆகியோருடனான கலந்துரையாடல் மற்றும் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (20)கிண்ணியா துரையடி ரெஸ்ட் விடுதியில்   இடம் பெற்றது.

பொறுப்புக்கள் தொடர்பான இஸ்லாமியக் கண்ணோட்டம் தொடர்பான விசேட உரையும்
எதிர்காலத்தில் சமூக நலனுக்காக இணைந்து செயல்படுதல் தொடர்பான  கலந்துரையாடலும் இடம் பெற்றது.இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் உட்பட கிண்ணியா நகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி சூறா சபை தலைவர் பரீட் மற்றும் சமூக ஆய்வலர்கள் என பலரும் கலந்து கொட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...