நிந்தவூர் PRF சமூக சேவை அமைப்பினால் நடாத்தப்படும் மாபெரும் வினா விடை போட்டி

நிந்தவூரில் கடந்த 8 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பின் சமய மற்றும் கலாச்சார அபிவிருத்தி பிரிவினரால் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நாடலாவிய ரீதியில் வினா விடைப் போட்டி ஒன்றினை நடாத்துகின்றது.

ஒரு சமூகத்தினை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அச்சமூகத்தின் வரலாற்றை மறக்கடிக்க செய்தலே போதுமானதாகிவிடும். அந்த வகையில் நாம் வாழுகின்ற சூழலில் நம் வரலாறுகளை அறிந்திருத்தல் ஒவ்வொருவர் மீதும் கட்டாய கடமையாகும்.
முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் ஒரு சிறு பகுதியையாவது தற்கால இளைஞர்கள் மற்றும் ஏனையவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இவ்வினா விடை போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வினா விடை போட்டியில் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகள் மற்றும் இஸ்லாமிய விடயங்களை உள்ளடக்கியதாக மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்குபெற்றுவதன் மூலம் நமது வரலாற்றினை அறிந்து கொள்வது மட்டும் அல்லாமல் பல்வேறு பரிசில்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
இப்போட்டியில் பங்கு கொள்ள பின்வரும் வினாக்களுக்கான உரிய விடைகளை தரப்பட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் Or PRF Facebook Messenger ( https://www.facebook.com/PromisingReliefFront/ ) or தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் WhatsAppகளுக்கு 15.06.2018 திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்கவும். 

இவ்வினா விடை போட்டிக்கான கேள்விகளினை பின்வரும் Link இனை Click செய்வதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Link : 

இவ்வினா விடை போட்டியில் நாடலாவிய ரீதியில் இன மத வயது வேறுபாடுகள் இன்றி அனைவரும் பங்கு கொள்ள முடியும்.
விடைகளுடன் உள்ளடக்கப்பட வேண்டிய தகவல்கள்.
பங்குபற்றுபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பாடசாலையின் பெயரும் சுட்டிலக்கமும்.

விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி
AAM Naashif
PRF Social Service Association
16, Wellaskaddu Road
Nintavur – 25,    
#32340

வினாக்களினை தரவிறக்கம் செய்வதில் ஏதாவது அசௌகரியங்களை எதிர் நோக்கினால் அல்லாது மேலதிக விபரங்களுக்கு பின்வரும் நபர்களை தொடர்பு கொள்ளலாம்.
S Mohamed Saheeth : 075 275 2525
T Mohamed Insaf      : 077 666 3363
A Athharul Haq         : 075 589 4636

விடைகளை அனுப்ப வேண்டிய முறை (உதாரணம்)
பெயர் : SM Sahri
முகவரி : 106-b, Main street, Nintavur
தொ.பே.இல: 0778884123
தே.அ.அ.இல : 9201555555v
விடைகள்
1) a
2) b

விடைகளை மேற் கூறப்பட்ட இலக்கங்களின் WhatsApp களுக்கு அல்லது PRF facebook messengerku அல்லது பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க முடியும்.

Sameen Mohamed Saheeth
(ஊடக பிரிவு – PRF சமூக சேவை அமைப்பு - நிந்தவூர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...