தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 16, 2018

சிறையில் ஞானசார தேரருக்கு ஏற்பட்டுள்ள நிலை; 15 பேர் தங்கும் அறையில் கடூழிய சிறையாம்!பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் விருந்தினர்களை சந்திப்பதனை நிராகரித்து வருகின்றார்.

சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தி திட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஞானசார தேரர் 15 கைதிகளுடன் வெலிக்கடை சிறைச்சாலையின் ஆர் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆர் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நன்நடத்தையுடையவர்கள் எனவும், ஞானசார தேரருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளியான எந்தவொரு கைதியும் சிறைச்சாலையில் ஜம்பர் அணிய வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
எனினும், தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள காரணத்தினால் ஞானசார தேரர் தொடர்ந்தும் காவி உடையணிந்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages