ஹாறுன் மௌலவியின் முயற்சியால் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதி புனரமைப்பு!அலுவலக செய்தியாளர் எம்.ஐ.அஸ்பாக்
பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகநெகும கிராமிய வீதி புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூபாய் இரண்டு மில்லியன் செலவில் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதி புனரமைப்பதற்கான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக குண்றும் குழியுமாக காணப்பட்ட இந்த  அஹமட் ஹிராஸ் வீதியை புனரமைப்புச்செய்து தருவதாக கடந்த பிரதேச சபை தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  கல்குடாதொகுதி அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இதற்கான நிதியொதிக்கீடு செய்துள்ளார்.
வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் கல்குடாதொகுதி அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி, மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களான  MAM.லத்தீப் மற்றும், MFM றியாஸ் ஆகியோர் நேற்றையதினம் குறிப்பிட்ட  வீதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த வீதியின் தற்போதைய நிலைமையே  இப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...