சாய்ந்தமருது என்றும் சிராசுடன் தான்; சிராஸ் மீராசாஹிபின் இப்தார் சாய்ந்தமருதில்..!

எம்.வை.அமீர்
சாய்ந்தமருது மீராசாஹிப் சதுக்கத்தில் வருடாந்தம் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வும் துஆ பிராத்தனையும், நோன்பின் 27 ஆம் தினமான 2018-06-13 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தவிசாளரும் மெற்றோ பொலிடன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் அஷ்செய்க் எஸ்.ஏ.எம்.ஜினான் (அஸ்ஸஹ்தி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வின்போது கல்முனை இராணுவ முகாமின் மேஜர் சஜித சுதுசிங்க,கல்முனை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சரின் பிரத்தொயோக செயலாளர் நௌபர் ஏ. பாவா முன்னாள் கல்வி அதிகாரி மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.நஸார்டீன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) உள்ளிட்ட பிரமுகர்களும் உயர் மட்ட அதிகாரிகள், அதிபர்கள்,வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள்,இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள், விவசாயிகள்,மீனவர்கள், பெண்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...