BREAKING NEWS

Jun 3, 2018

கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்னகலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்

தென்கிழக்குப் பல்கலைக் கழக பரிணாம வளர்ச்சிப் போக்கில் முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் காலம் பொற்காலமாகும்.பல்கலையின் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலையை உருவாக்குவதில் எவ்வாறு முனைப்புக்காட்டி செயற்பட்டாரோ அதற்குக் கடுகளவேனும் குறைவில்லாது மேலுமொரு பாத அடியை முன்னோக்கி நகர்த்திச் சென்று முழு வீச்சுடன் தென் கிழக்கை தலை நிமிரச் செய்த பெருமை இஸ்மாயில் அவர்களையே சாரும்.

மனித நேயத்துக்கு மதிப்பளித்து எல்லோருடனும் இனிமையாகப் பழகக் கூடிய ஒரு கல்விமான் பல்கலை சமூகத்துடன் மட்டுமன்றி பல்கலை தொடர்பாக தேசிய மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் ஊடகங்கள் வாயிலாக பல்கலையை உயர் நிலைக்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றியவர்.

இவரது காலத்தில் இவருடன் இணைந்து பணியாற்றிய விரிவுரையாளரகள் , கல்வி சாரா உத்தியோகத்தர்கள் எனப் பலரதும் நேசத்துக்குரியவர். இப்படியான புகழுக்குரியவரை மட்டந்தட்ட வேண்டுமென்பதற்காக ஒரு கூட்டம் களமிறங்கி நாறடிக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளன.

பல்கலையின் இன்றைய நிலையை நோக்கும்போது கவலையாகவுள்ளது. .தற்போதைய உப வேந்தருக்கும்  ஆசிரியர் சங்கத்துக்குமிடையே கயிறிழுப்பும் கழுத்தறுப்புக்களும் பதவி மோகமும் பகைமையை மூட்டிக் கொண்டிருக்கிறன.

ஆசிரியர் சங்கம் பல்கலைக் கழக நிர்வாகச் சீர் கேடுகள் பற்றி இரண்டு ஊடகச் சந்திப்புக்களை மேற்கொண்டு நிருவாகத்திலுள்ள ஓட்டை ஒடிசல்களை வெளிக் கொணர்துள்ள வேளையில்  ஆசிரியர் சங்கம் என்பது ஒரு சிறிய குழு என்று உப வேந்தர் தரப்பு கூறுகின்றுது.

வீதியில் பஸ்ஸை செலுத்துகின்ற சாரதியின் லைசனுக்குத்தான் எழுத்தும் வழக்கும் , லைசனை மடியில கட்டிக்கிருக்கிற சாரதிக்கு ஒரு சிக்கலுமில்லை.

குளத்துல கூட நீந்திப் பழகாதவனை சமூத்தித்தில் நீந்தச் சொன்னா நடக்கிற காரியமா.

கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கிற பூனைக்கு நந்தவனம் பூச்சொரிந்ததைக் காணமுடியுமா.என்ற வார்த்தைப் பிரயோகங்களையெல்லாம் சனங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குவைத் போன்ற நாடுகளிலிந்து ஆயிரக் கணக்கான மில்லியன்களைக் கொண்டு வந்து பல்கலை வளாகத்தையே பௌதீக வளங்களாக விதைத்து முளைக்கச் செய்தவர் மீது

இத்தனை அபாண்டஙகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்மை பெரும் துரோகமாகும்.இது கர்ணனுக்கு ஏற்பட்ட சூழச்சி போலுள்ளது.  

முன்னாள் உப வேந்தர் ஆளுமைமிக்க திறமை வாய்க்த ஓர் அறிஞர்.தான் பதவி வகித்த காலத்தில் பல்கலைக் கழகத்தின் வளர்சிக்காக சகல சக்திகளையும் உட்பாய்ச்சல் செய்தவர்.

இங்கு வருகை தந்த அமைச்சர்கள் ஜனாதிபதி போன்றவர்கள் இப்பல்கலையின் வளர்ச்சி கண்டு அதிசயக்குமளவிற்கு வேலை காட்டியவர்.

என்பதை பச்சோந்திகள் இன்னுமா அறியாமலிருக்கிறார்கள் என வீசியின் சாதனைகளை சுவரொட்டிகளில் போட்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த நிறுவனமாக இருந்தாலும் நமது பாஷையில் சொல்வதானால் கணக்கு வழக்குப் பார்ப்பது வழக்கம்.அத்துடன் ஓடிற் பாஞ்சிருக்கு என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்வார்கள்.பின் ஒன்றுமில்லையாம்  என்ற கதை வரும்.

இது தெரியாமலா பட்டஞ் செஞ்ச புள்ளக இருக்காங்க. என்ற மாதிரி செங்கப்பட வட்டைக்க வெதப்பாட்டுல சிறுவாலோட நிண்ட காக்கா கெம்பஸப் பத்திக் கதைக்கார்.

 ஒரு பொது மகனின் முறைப்பாட்டை  குறித்து கிராம சேவகர் பிரதேச செயலாளருக்குப் பரிந்தரை செய்யும் போது டீ. எஸ் ஆனவர் தனது கீழ் நிலை உத்தியோகத்தரின்; கையொப்பத்தையும் சீலையும் பார்த்த பின்  நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த ஆவணத்துக்கு ஒப்புதல் வழங்குவார் இது வழமை.

பல்கலையில் இவர் பணியாற்றிய காலம் கடமைக்குச் சமூகமளித்தால் பணிமுடிந்து செல்லும்போது இரவாகிவிடும்.இப்போதுள்ள நிலை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

வீசி இஸ்மாயில் பட்டமளிப்பை இங்கேயே நடாத்தி பெருந்தலைவரின் கனவை நனவாக்கினார். முன்னாள் வீசியுடன் எந்த நேரமும் தொர்புகளைப் பேணலாம்.

ஊடகவியலாளர் சந்திப்புக்கள் அடிக்கடி நடக்கும் அப்போது அபிவிருத்தி யுகமாக இருந்தது. இப்போது அப்படியெல்லாம் இல்லை.

அண்மையில் கூட ஊடகவியலாளர்களுக்குக் கதவடைப்பு நடந்தது. இது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

பல்கலைக்கழக கவுன்சிலர் சிலரைத் தேவையின் பொருட்டு கைபேசியில் அழைத்தால் சில நேரம் கொழும்பில்; இருந்து பதில் தருவார்கள் .விசாரித்ததில் கவுன்சில் மீற்றிங்குக்கு  வந்ததாகக் கூறுவார்கள்.

ஏன் கவுன்சிலை இங்கு நடாத்தாமல் கொழும்பில் நடாத்தினால் பிரயாணச் செலவுக்கான அலவன்சுக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவாகுமே என்று கேட்டால் ஆறுமாதமாக ஒழுங்கா கூட்டம் நடைபெறுவதுமில்லையே என்பர்

இது தொடர்பாக தற்போதைய உப வேந்தரை தொடர்பு கொண்டு உண்மை நிலையை அறிய முற்பட்டால் பதில் கிடைப்பதில்லை;.அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றும் கூட இது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. (தொடர்பு கொள்ள முடியவில்லை)

இந்த நிலை என்று முடியுமென்று தெரியவில்லை.எதிர்காலத்திலும் இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால்

நிச்சயம் தலைவர் அஷ்ரபை நேசித்த மக்கள் சாத்வீகப் போராட்டங்களைக் கூட நடத்தலாம் என்ற ஐயம் எழுகின்றது.

நல்லாட்சயில நடக்கிற கொதறத்துக்கள காட்டிலுமா வீயின்ர பிரச்சினை . இவுகளுக்குப் பெரிசாத் தெரியுது.

மூன்று வருஷத்துக்கு மேல கோடு கச்சேரி நடக்குது என்னத்துக்காலும் முடிவாச்சா.

காலச் சாப்பாட்டோ வந்த அதிகாரி பகல் சாப்பாட்ட முடித்த கையோட முடிஞ்ச சமாச்சாரத்துக்கு பயபுள்ளக இப்படி ரகழ பண்றாப்போல.

 நம்முட தலைவர் சும்மால்லடி சத்தியத் தலைவர் அவரு ரஜனி ஸ்டையில் சொன்னமாதிரி ஒரு தடவ சொன்ன கதைய இப்ப செய்யப் போறார் எண்ட கத அடிபடுகுதில்ல அதாண்டி.

 அடியே! பொறம் போக்கெல்லாம் கூடி நம்மட வீசிர சங்கையக் கொறைக்கானுகள் வேறொண்ணுமில்லடி. இது களியோடை ஆற்றுல வலபோட்டாள்ல கதை.இப்படித்தான் விவகாரமெல்லாம் கதையாப் போகுது.

சந்தேகத்தில் பேரில் நடைபெறும் விசாரணையின்; அடிப்படையில் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட  தனி நபரைக் கொண்ட சுயாதீன ஆணை அதிகாரி பல்கலைக்கு வந்து விசாரணைகள மேற்கொண்டுள்ளார்.இங்கு வந்த விசாரணை அதிகாரி பதிவாளர் பிரதிப் பதிவாளர் விரிவுரையாளர்கள் விடுதிப் பொறுப்பாளர்கள் பொறியியலாளர்கள் எனப் பலரையும் விசாரணை செய்துள்ளார். இதிலிருந்து நாம் எதை விளங்கிக்க் கொள்வது.விசாரணை முடிவாகட்டும் சற்றுப் பொறுத்திருப்பம்.

புத்திஜீவிகளை உருவாக்கும் பாரிய நிறுவனமான பல்கலைக் கழகங்களில் துறைசார் ரீதியாக ஒவ்வொரு விடயங்களையும் கவனிற்பதற்கு குழுக்களும் சபைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.அதற்குத் தலைவர்களும் நியமிக்கப் பட்டு இருப்பார்கள். ஒரு குறித்த விடயத்தை கையாண்ட குழுவின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கும் பணி உபவேந்தரின் கடமையாகும்.அந்தக் கடமையைத்தான் வீசி  இஸ்மாயிலும் செய்துள்ளார்.

எங்கள் கிராமங்களிலும் முல்லக்காறன் சொல்வதைத தான்  போடியார் கேட்பதுண்டு .போடியாருக்குத் தெரியாது பூச்சிக்கு என்ன கிருமி நாசினி அடிப்பதென்று.

 பல்கலைக் கழக விடுதி மாணவர்களின் கட்டில் மெத்தை விவகாரத்தைக் கூட ஒரு உப வேந்தரால நேரடியாகக்  கவனிக்க முடியாது. அதனைக் கவனிக்க விடுதியுடன் தொடர்புடைய அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களால்தான் காரியங்களும் நடைபெறும்.அங்கு தவறேதும் நடந்தால் அதுபற்றி விசாரிப்பதில் தவறேதுமுண்டா. 

களியோடை ஆறு பெருக்கெடுத்தால் அல்லது தொடர் மழை பெய்தால் பல்கலைக் கழகத்துக்குள் செல்வது தோணியில். இதற்கு பட்டமளிப்பு விழா மண்டபம் விதிவிலக்கல்ல.

  நிறைவான கல்விப் பணி செய்த இவர் மீது அன்பு கொண்ட இவரது பல்கலை மாணாக்கர்களும் அம்பாரை மாவட்ட வாக்களர்களும் இவரின் தாய் மண்ணைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு இவரை இழுதத்து வந்தனர்.

மக்களுக்கு இவரைத் தெரியாது வீசி என்ற சொற் பதத்தை மக்கள் செவியுற்றிருக்கிறார்கள்.

தேர்தல் நடைபெற்றது, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அ.இ.ம.கா.ஓர் ஆசனத்தை இழந்தது.

வீசி சோர்வடையவில்லை .தனது கட்சித் தலைவருடன் கட்சியின் வளர்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார்.

இந்த வேளையில்தான் தேசிய பட்டியல் விவகாரம் .த லைவர் இவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி விடுவாரோ என்ற அச்சம் 

எதிர்தரப்பு அரசியல் வாதிகளுக்கும் உள்ளுக்கிருந்து சதி செய்யும் கும்பல்களுக்கும் மனப் புரழ்வை ஏற்படுத்தியது

அதன் காரணமாகவே வீசி மீது சேறு பூசும் படலமும்; விஷ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மக்கள் தலைவர் எல்லாவற்றையும் நன்குணர்தவர் அவருடைய முடிவில் றஹ்மத் இருக்கும் எனபதில் மக்கள் ஐயங் கொள்ளத் தேவையில்லை.

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By