Jun 26, 2018

நிராகரிக்கப்பட்ட முகவர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம்


இவ்­வ­ருடம் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஒரு சில ஹஜ் முக­வர்­களே ஹஜ் ஏற்­பா­டுகள் குறித்து உண்­மைக்குப் புறம்­பான கருத்­து­களைப் பரப்பி வரு­கி­றார்கள். புதிய கோட்டா பகிர்வு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பு ஹஜ் கட்­ட­ணத்தில் வீழ்ச்­சி­யேற்­பட்­டுள்­ளது. முக­வர்­களைத் தேர்ந்­தெ­டுக்கும் உரிமை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது. நிரா­கரிக்­கப்­பட்­டுள்ள ஒரு சில ஹஜ் முக­வர்­களின் குற்­றச்­சாட்­டு­களை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கிறோம் என அரச ஹஜ் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரிவிக்கப்பட்டுள்­ளது.
நேற்று முன்­தினம் ஐக்­கிய ஹஜ் ஏஜன்சிஸ் ஸ்ரீலங்கா என்ற அமைப்பு கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊடக மாநாட்டில் அரச ஹஜ் குழு­வுக்கும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும் எதி­ராக தெரி­விக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டு­க­ளுக்கும் பதி­ல­ளிக்கும் வகையில் அரச ஹஜ் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
"கடந்த வருடம் இலங்­கைக்கு இறுதிச் சந்­தர்ப்­பத்தில் கிடைக்­கப்­பெற்ற 600 மேல­திக ஹஜ் கோட்டா தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 8 கோடி 64 இலட்சம் பணம் அற­விட்டு அப்­ப­ணத்­திற்கு பற்­றுச்­சீட்டு வழங்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் அப்­பணம் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பப்­பட்­ட­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு பொய்­யா­ன­தாகும். இதற்கும் திணைக்­க­ளத்­துக்கும் தொடர்­பில்லை.
600 மேல­திக கோட்­டா­வுக்­கு­மான கட்­ட­ணத்தை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து சம்­பந்­தப்­பட்ட முக­வர்­களே அற­விட்­டார்கள். ஹஜ்­ஜுக்­கான ஏற்­பா­டு­களை 4 முகவர் சவூதி மக்­கா­வி­லி­ருந்து மேற்­கொண்­டார்கள். ஹஜ் முக­வர்­களால் அற­வி­டப்­பட்ட பணம் சவூ­தியில் தங்­கி­யி­ருந்த 4 ஹஜ் முக­வர்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டது. நான்கு முக­வர்­க­ளுமே ஹோட்டல் ஏற்­பாடு, தங்­கு­மிட வசதி மற்றும் போக்­கு­வ­ரத்து வச­திக்­கான ஏற்­பா­டு­களைக் கவ­னித்­தார்கள்.
சவூதி அரே­பி­யாவில் 600 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் செலுத்­தப்­பட்­டுள்­ளன என்­பதை திணைக்­களம் அறியும். அவற்­றுக்­கான பற்­றுச்­சீட்­டுக்கள் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்­க­ளி­டமே உள்­ளன.
பின்­வ­ரு­மாறு கட்­ட­ணங்கள் தலா ஒரு­வ­ருக்கு என்ற ரீதியில் 600 பேருக்கும் செலுத்­தப்­பட்­டுள்­ளன.
முஅல்லிம் கட்­டணம் 1500 சவூதி ரியால்கள், அஸீ­ஸியா தங்­கு­மிட கட்­டணம் 750 ரியால்கள்.
போக்­கு­வ­ரத்து கட்­டணம் 1029 ரியால்கள், தாமீன் கட்­டணம் 22.5 ரியால்கள் ஆகும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றைகள் (Guide Lines) கடந்த மூன்று வரு­டங்­க­ளாக மீறப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரிவு, ஹஜ் முக­வர்கள் தெரிவு என்­பன பற்றி உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய வழி­முறை பேணப்­பட்­டுள்­ளது. ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்கு விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற வழி­மு­றையும் கடைப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சையின் பின்பே தெரிவு செய்­யப்­ப­டு­கி­றார்கள். அவர்கள் பெற்­றுக்­கொண்ட புள்­ளி­களின் அடிப்­ப­டை­யிலே கோட்டா வழங்­கப்­ப­டு­கி­றது. முக­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய கோட்டா எண்­ணிக்கை தொடர்பில் உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­மு­றையில் குறிப்­பி­டப்­பட்­டில்லை.
ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து பதி­வுக்­கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. அக்­கட்­டணம் அவர்கள் பய­ணிக்­கும்­போது மீளக் கைய­ளிக்­கப்­ப­டு­கி­றது. அதற்­கான பற்­றுச்­சீட்டு வழங்­கப்­ப­டு­கி­றது.
ஹஜ்­ஜுக்­காக 20 ஆயிரம் பேர் விண்­ணப்­பித்­து­விட்டு காத்துக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­விப்­பதில் எந்த உண்­மை­யு­மில்லை. இவ்­வ­ருடம் 340 பேரே ஹஜ் பய­ணத்தை 25 ஆயிரம் ரூபா செலுத்தி உறுதி செய்­துள்­ளார்கள். அதனால் 400 பேரே மேல­தி­க­மாக ஹஜ்­ஜுக்­காக காத்­தி­ருக்­கி­றார்கள். இவ்­வ­ருடம் 3000 கோட்டா கிடைத்­துள்­ளது.
சேவைக் கட்­ட­ண­மாக ஒரு ஹஜ் யாத்­தி­ரி­க­ருக்கு 2000 ரூபாவே அற­வி­டப்­பட வேண்­டு­மென உயர்­நீ­தி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதனை நாம் ஏற்­றுக்­கொள்­கிறோம். ஆனால் தற்­போ­தைய நிர்­வாக செலவு, பண வீக்கம் கார­ண­மா­கவே இக்கட்டணம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கெதிராக நீதிமன்றில் வழக்கொன்று விசாரணையின் கீழ் உள்ளது. இதேவேளை நீதிமன்றம் புதிய கோட்டா பகிர்வு முறைக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. ஏனென்றால் இம்முறையினால் ஹஜ் பயணிகளின் நலன் பேணப்படுகிறது. ஹஜ் கட்டணத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது. கடந்த வருடங்களில 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 5 இலட்சம் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network