தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 8, 2018

தைக்காநகரில் பெருநாள் களைகட்டுகிறது; அன்வர் நௌசாடிற்கு அங்காடி வியாபாரிகள் நன்றி!சிலோன் முஸ்லிம் அட்டாளசை்சேனை செய்தியாளர்

அட்டாளைச்சேனை தைக்காநகரில் பெருநாள் களைட்டுகிறது, இதற்கு முக்கிய காரணம் அங்காடி வியாபாரிகள் அதிகமானோர் தைக்காநகரின் வீதியோரங்களில் நுாற்றுக்கும் அதிகமான கடைகளை திறந்திருப்பதே, அக்கரைப்பற்றில் சென்ற வருடங்களில் களை கட்டியதை விட இந்த வருடம் அதிகமான சன நெரிசலாக காணப்படுகிறது.

அக்கரைப்பற்று மேயரின் அசமந்தமான போக்கினாலும், அவரிகளின் புறக்கணிப்பினாலும் புறம் தள்ளப்பட்ட அங்காடி வியாபாரிகள் தைக்காநனரை தஞ்சமைடந்தனர், இந்த சம்பத்தில் அதிகம் கவனம் எடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தைக்காநகரில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதென முடிவு எடுத்தனர், தைக்காநகர் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர் நசீரின் செயலாளருமான அன்வர் நௌசாத் அவர்களின் மேற்பார்வையின் கீழ், பிரதேச சபை தவிசளார், அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஒழுங்குகளை செய்து கொடுத்து தற்பொழுது மினி பெட்டா போல தைக்காநகர் காணப்படுகிறது.

அங்காடி வியாபாரிகள் அன்வர் நௌசாடிற்கும், பிரதே சபைக்கும், பாடுபட்டுவர்களுக்கும் நன்றிகளை தெரவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages