அக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்நபீஸ் - அவுஸ்தேலியா

அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எல்லையை வகுத்தார், அதற்கு பதிலீடாக இன்று மாநகர எல்லைக்குள் அதுவும் நகரின் முகப்பில் பௌத்த கொடிகள் பறப்பதை காண முடிகிறது, இந்த செயலுக்கு அனுமதித்த மாநகர மேயருக்கு புலம்பெயர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் வபா முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிலோன் முஸ்லிம் அவுஸ்தேலிய செய்தியாளர் நபீஸ்க்கு அவர் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

அக்கரைப்பற்று தொன்மை வாய்ந்த முஸ்லிம் பிரதேசம், சிங்களர்களின் நகருக்குள் முஸ்லிம் கொடியை பறக்க அனுமதியளிப்பார்களா? அல்லது இன்றிருக்கின்ற சூழ்நிலையில் அது சாத்தியமா? நிலமே மது அடையாளம் அந்த நிலத்திற்குள் ஏனைய கலாச்சாரங்களை திணிப்பது எதி்ர்காலத்திற்கு கேடானது. நகர மத்தியில் எமது கலாச்சார அடையாளத்தை பதிக்க தவறிய காரணமே இன்று இந்த பௌத்த கொடி என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...