அகமட் எஸ். முகைடீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் சங்கத்தினர் இன்று (9) சனிக்கிழமை பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் சந்தித்து கரும்புச் செய்கை தொடர்பில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். 

குறித்த கரும்புச் செய்கையாளர்கள் பெல்வத்த, ஹிங்குரான மற்றும் செவனகல ஆகிய சீனித் தொழிச்சாலைகளுக்கு தமது கரும்பு உற்பத்திகளை வழங்கிவருவதாக தெரித்த அவர்கள் கரும்பு உற்பத்தியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கும் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியபோதிலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். 

கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார். 

Share The News

Post A Comment: