மாடுகளை கொண்டு வந்தார்கள் என்பதற்காக இரு முஸ்லிம்கள் அடித்துக்கொலை !!இந்திய கவுடா மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிவந்த இரு முஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர் , பசுக்களின் பாதுகாவலர்கள் என்று தம்மை அழைக்கும் கும்பலினால் இவர்கள் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஷிராபுதீன் அன்சாரி (வயது 35) மற்றும் முர்தாஸா அன்சாரியை (வயது 30) கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் குறிப்பிடுகின்றது . இவர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் 4 பேரை கைது செய்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மாட்டு கரி சாப்பிட்டார்கள் , வைத்திருந்தார்கள் , கொண்டு சென்றார்கள் என்பததற்காக இந்திய இந்து வெளியர்களினால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்டுகின்றமை அதிகமாக இடம்பெற்று வருகின்றது. மோடி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு எதிராக நிறுவனமயப்படுத்தப்பட்ட காவிப் பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டு வருகின்றன

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...