அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்; இனவாத கருத்துக்களை பரப்ப வேண்டாம்அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் சிலர் ஹிந்துக்களால் தாக்கப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது, குறித்த தகவலை முதலில் இனவாத சம்பவம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் பதிவிட்டிருந்தார் இந்த பதிவே குறித்த சம்பவத்தை இனவாத சம்பவமாக காட்டியது.

அதிகாரத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் மூலம் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் அப்படி செய்திராமல் வெறும் பேஸ்புக் பதிவின் மூலம் மக்களை சூடாக்குவது உகந்ததல்ல என மனித உரிமைகள், ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்