அமைச்சர் ஹக்கீம் வேண்டாம்! ரிசாத் பதியுதீன் பிடிவாதம்வடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது வடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட அமைச்சர் ரிசாத் பதியூதீன், அமைச்சர் ஹக்கீம் குறித்த செயலணியில் உள்வாங்கப்பட்டால் தான் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கண்டியில் பிறந்த அமைச்சர் ஹக்கீமுக்கு வடக்குடன் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் அவர் வாதிட்டார்.
இதன்போது குறித்த செயலணியில் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா உள்வாங்கப்பட்டிருப்பதை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரிசாத், வடக்கில் சிங்களவர்களை மீள்குடியேற்றம் செய்யும் விடயங்களை மேற்பார்வை செய்ய அமைச்சர் துமிந்தவும், உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளை ஒருங்கிணைக்க அமைச்சர் பைசர் முஸ்தபாவும் நியமிக்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...