அலுவலக செய்தியாளர் எம்.ஐ.அஸ்பாக்

கல்குடாவில் இயங்கி வரும் அல்கிம்மா நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் ரமழான் காலப்பகுதிகளில் வறிய குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு பெறுமதிமிக்க உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் MMS.ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக  இவ்வருடமும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர்களின் முழு  உதவியோடு சுமார் 50 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வைக்கப்பட்டது.


Share The News

Post A Comment: