Jun 6, 2018

தெல்தெனிய வன்முறைகள் குறித்து கவலையடைகிறோம்; இப்தாரில் ரணில் உரை!தெல்­தெ­னிய பகு­தியில்  கடந்த மார்ச் மாதம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில்  அர­சாங்கம் கவலை அடை­வ­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று தெரி­வித்தார்.
அலரி மாளி­கையில் இடம்­பெற்ற இப்தார் நோன்பு துறக்கும் வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
தெல்­தெ­னிய வன்­மு­றை­களின்  போது சட்டம் ஒழுங்கை  சில நாட்­க­ளுக்கு நிலை­நாட்ட முடி­யாமல்
போன­தா­கவும், எனினும் சில நாட்­களில் சுதா­க­ரித்­துக்­கொண்டு சட்டம் ஒழுங்கை வழ­மைக்கு கொண்­டு­வர முடிந்­த­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.
 இந் நிலையில் அந்த வன்­மு­றைகள் குறித்த விசா­ர­ணைகள் தொடரும் நிலையில், ஒரு சாராரை தொடர்ந்தும் சட்ட ரீதி­யாக சிறைப்­ப­டுத்தி வைத்­துள்­ள­தா­கவும், கடந்த சில மாதங்­க­ளுக்குள் மட்டும் நூற்­றுக்கும் அதி­க­மான இவ்­வா­றான சம்­ப­வங்கள் குறித்த விசா­ரணைக் கோவைகள் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
 எவ்­வா­றா­யினும் இவ்­வாறு வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடை முறைப்­ப­டுத்­து­வதன் ஊடாக எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தவிர்த்து, மேலும் ஒற்­று­மை­யுடன் முன்­னோக்கி செல்­வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் குறிப்­பிட்டார்.
 புனித ரமழான் நோன்பு துறக்கும் வைப­வ­மொன்­றினை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அலரி மாளி­கையில் ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இதில் பிர­த­ம­ருக்கு மேல­தி­க­மாக சபா­நா­யகர் கரு  ஜய­சூ­ரிய, அமைச்­சர்கள் பிர­தி­ய­மைச்­சர்கள் எதிர்க்­கட்சித் தலைவர்,  வெளி­நாட்டுத் தூது­வர்கள் என ஏரா­ள­மா­ன­வர்கள் பங்­கேற்­றனர்.
 இதில் இப்தார் நிகழ்­வுக்கு அனை­வ­ரையும் வர­வேற்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உரை­யாற்­றினார். இதன்­போதே அவர் மேற்­கொண்ட விட­யங்­களைத் தெரி­வித்தார்.
 இதன்­போது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­த­தா­வது, 'முஸ்­லிம்­க­ளுக்கு இந்த ரமழான் நோன்பு துறக்கும் வைபவம் மிக முக்­கி­ய­மா­னது. அத­னூ­டாக அவர்கள் தமது மத அனுஷ்­டா­னங்­களை மிக அமை­தி­யாக வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.
 பல்­வேறு இன மக்கள் வாழும் நாட்டில் அமை­தியை உறுதி செய்ய ஒவ்­வொரு இன, மத, கலா­சா­ரத்தை பின்­பற்றும் மக்­களும் அவற்றை அனு­ப­விக்­கத்­தக்க சூழலை  ஏற்­ப­டுத்த வேண்டும்.
 எனினும் இவ்­வா­றான பல் இன, மத நாடு­களில், பிரச்­சி­னைகள், குழப்­பங்கள், வன்­மு­றைகள், அடிப்­ப­டை­வாதம் என பல சிக்­கல்கள் உரு­வாகும். அவற்றை வெற்­றி­க­ர­மாக முகம் கொடுத்து, அனை­வரும் தத்­த­மது கலா­சா­ரத்தை, மதத்தை அனு­ப­விக்கும் சூழலை உரு­வாக்கும் போதே ஒற்­றுமை சாத்­தி­ய­மாகும்.
உண்­மையில் தெல்­தெ­னிய பகு­தியில்  கடந்த  மார்ச் மாதம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் கவலை அடை­கிறோம்.  விலை மதிப்­பற்ற உயிர்கள் இதில் காவு­கொள்­ளப்­பட்­டது. சில நாட்கள் சட்டம் ஒழுங்கு நிலை நாட்­டப்­ப­ட­வில்லை. எனினும் பின்னர் அது ஒழுங்காக நடைமுறைக்கு வந்தது.
 பலரைக் கைது செய்தோம். முகப்புத்தகத்தை தடை செய்தோம். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பிணையில் உள்ளனர். மேலும் பலரை சட்ட ரீதியாக  சிறையில் வைத்துள்ளோம். இது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றது என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network