Jun 13, 2018

றமழான் இறுதிப் பத்தில் முஸ்லிம் சிறுவர்களோடு ஜனாதிபதி சிறீசேன... வைரல் புகைப்படம்

புத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் பிரதேசத்தில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (RO Plant), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் இணைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இன்று (13) பொதுமக்களின் பாவனைக்கு கையளித்தார்.
இத்திட்டத்தின் மூலம் இனம்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும்.
2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இந்த நிகழ்வில் வரவேற்பு செய்த சிறுவர் சிறுமிகளுடன் ஜனாதிபதி சிறீசேன அன்பாய் இருக்கும் படங்கள் வைரலாக பரவி வருகிறது

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post