முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச்செய்திகள் ஓர் தொகுப்பு


நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் – இம்ரான் MP

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுஇறை அச்சம்சகிப்புத் தன்மைவிட்டுக் கொடுப்பு போன்ற நல்ல பல அம்சங்களை புனித நோன்பு நமக்கு கற்றுத் தந்துள்ளது. இவற்றின் மூலம் நாம்பக்குவப் படுத்தப் பட்டுள்ளோம். இந்தப் பக்குவம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதன் மூலம் இறை அன்பையும் அருளையும் நாம்பெற்றுக் கொள்ள முடியும்.

நம் நாட்டை பொறுத்தவரை அண்மையில் ஏற்பட்ட வெள்ளம்மண்சரிவுகலவரம் போன்றவேற்றாலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களாலும் இப்பெருநாள் தினத்தை சந்தோசமாக கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர் எனவே அவர்களையும் எமது துஆவில் சேர்த்துக்கொள்வோம்.
மேலும் நோன்பு காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட பயிற்ச்சி நெறிகளை கொண்டு நாட்டில் இன நல்லிணக்கம்சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்களாகிய நாம் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதுக்கும் இத்திருநாளில் அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும்.

கௌரவ. ஏ.எல்.எம்.நசீர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியினால் புனித ரமழான் மாதத்தை கண்ணியமாகவும், இறைவனுக்கு பொருத்தமான வகையிலும் கழித்து ஆன்மீக புத்துணர்வுடன்  புனித பெருநாள் தினத்தை அடைந்திருக்கும் இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து முஸ்லீம்களுக்கும் ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்களும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு அமையவும்  பிராத்திக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ.எல்.எம் நசீர் அவர்கள் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் " இலங்கை வாழ் முஸ்லிம்கள் தனது சமயத்துக்குள்ளும்  புறம்பாகவும் பல்வேறு சவால்களை முகங்கொடுக்க வேண்டிய சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. இவற்றை தாண்டி இந்நாட்டில் நமது பாதுகாப்பையும் இருப்பையும் தக்கவைக்கும் சாத்தியமான வழிகளில் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. மார்க்க விழுமியங்களும், விஷேடமாக இஸ்லாமிய வழிகாட்டல்கள் மூலமாக நாம் நமது பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

எத்தகைய சந்தர்ப்பத்திலும் நமது சமூகம் ஒற்றுமையினூடாக  மட்டுமே தனது இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்பதை வரலாற்றின் பல சந்தர்ப்பங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. அவ்வாறான வரலாற்று தருணத்தை நாம் நமது மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களது அழகிய முன் மாதிரிகள் மூலமாக சந்திக்க வேண்டும் என அனைவரும் இப்புனித தினத்திற் சங்கல்பம் பூணவேண்டியுள்ளது"

"அனைவருக்கும் மீண்டும் எனது ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்."

சவால்களை முறியடிக்க ஒற்றுமையுடன் செயற்படுவோம்! சமூக ஆர்வாளர் றுஸ்வின் முஹம்மட் தெரிவிப்பு

“இலங்கை மற்றும் உலக நாடுகளில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அத்தனை இஸ்லாமிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க ஒற்றுமையுடன் செயற்படுவோம் என இத்திருநாளில் உறுதிபூணுவோம்” 

இவ்வாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளரும், சமூக ஆர்வாளருமான றுஸ்வின் முஹம்மட் தனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
இந்த புனிதமான நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏகாதிபத்திய நாடுகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக்கள் மற்றும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபவர்கள்,பெண்கள் மற்றும் வயோதிபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

இஸ்லாத்துக்கு எதிராக இலங்கையில் திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து முஸ்லிம்கள் மிகவும் கவனமாகவும் - அவதானமாகவும் இருக்க வேண்டும். அத்துடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவும் - புரிந்துணர்வோடும் வாழ இத்திருநாளில் பிரார்த்தனை செய்வோம். 

அரசியல் ரீதியாக சிறுபான்மையின மக்கள் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கின்ற இச்சூழ் நிலையில் அதிகார பரவலாக்கம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளுக்கோ, இனவாத சக்திகளுக்கோ அடிபனியாமல் அதன் வலைகளில் சிக்காமல் மிக அவதானமாக இருக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன், கடந்த ஒரு மாத காலமாக அல்லாஹ்வினதும், அவனது தூதுர் முஹம்மது நபி(ஸல்) அவர்களதும் வழிமுறைகளை எவ்வாறு பின்பற்றினோமோ அவ்வாறே தொடர்ந்தும் பொறுமையாக ஒற்றுமையாக செயல்படுவோம் - என்றார். 

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி

இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற நன்னாளாகவும் புனித நோன்புப் பெருநாள் அமையவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

பிரதி அமைச்சர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், இன மத வேறுபாடுகள் இன்றி சகோதர வாஞ்சையோடு ஒரு தேசத்து மக்களாக ஒன்றிணைந்து வாழ்ந்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும். 

இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்ற அனைத்து நற்செயல்களையும் ஞாபகப்படுத்தும் மாதமாக ரமழான் அமைகின்றது. அந்தவகையில் நோன்பு காலத்தில் புடம்போடப்பட்டு எம்மில் எற்படுத்தப்பட்ட நல்ல மாற்றங்கள் புனித நோன்புப் பெருநாள் தினத்தோடு விடைபெற்றுவிடாமல் எமது வாழ்நாள் முழுவதும் தொடர்வதற்கும் நோன்புகாலத்தில் செய்த நல்லமல்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்று மறுமையில் ஈடேற்றத்தை பெறுவதற்கும் இறைவன் அனைவருக்கும் அருள் புரிய பிரார்த்திப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி 


ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வுக் கலாசாரத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக இலங்கைமுஸ்லிம் சமூகம் செய்துள்ள பெறுமதியான பங்களிப்புக்களை நாம் இச்சந்தர்ப்பத்தில்நினைவு கூருவதுடன் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்காக இத்தகையநல்லுறவுகள் தொடர வேண்டுமென  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ர ராஜபக்ஷ அவர்கள்விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு இந்தவாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கேற்ப ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையான ஒருமாத கால நோன்பை நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெருநாள்கொண்டாட்டத்தில் உலகெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்களுடன் இன்றுஇணைந்து கொள்கின்றனர். 

இது புனித அல்குர்ஆனினதும் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும்போதனைகளுக்கேற்ப நோன்புஇ ஆன்மீகப் பெருமானங்கள் மீதான ஆழ்ந்தஈடுபாடு.தொடர்ச்சியான வணக்க வழிபாடுகள். தியாகங்கள் போன்ற சமயக் கடமைகளில்ஈடுபட்டதைத் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பமாகும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக எமது நாட்டின் ஏனைய இனங்கள்மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து கடந்தகாலங்களிலும் இந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் புனித ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள். 

இந்த புனிதமான ஈகை திருநாள் உங்கள் அனைவரின் வாழ்வில் அமைதியையும்சுபீட்சத்தையும் அள்ளித்தரும் நாளாக அமையட்டும். ஈத் முபாரக்!வேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம்!
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

நாட்டில் இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி ஏற்பட எமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளையும் - கருத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபடுவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
அதேவேளை, “பாலஸ்தீன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற சகோதர முஸ்லிம்களின் துன்பங்கள் நீங்கி அமைதியாகவும் - சுதந்திரமாகவும் வாழ இத்திரு நாளில் பிராத்தனை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார். 
ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- 
“புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக்! ஒரு மாத காலம் பசித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி, நல்ல அமல்களை செய்தோம். இந்த பயிற்சி மூலம் பெற்றுக்கொண்ட அனுபங்கள் - நன்மைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்த இத்திரு நாளில் உறுதி பூணுவோம். 

உள்நாட்டிலும் - சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களையும் - பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் இயங்கி வருகின்ற நிலையில் நாங்கள் மிகவும் கவனமாகவும் - சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கொத்துக் கொத்தாக அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அம்மக்களுக்காக இத்திருநாளில் நாங்கள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அதேவேளை, உள்நாட்டில் எமக்கு எதிராக தீட்டப்படும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நாட்டில் அமைதி, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகளையும் - கருத்து முரண்பாடுகளையும் உண்டு பன்ன சிலர் முயற்சிக்கின்றனர். எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என இத்திருநாளில் உறுதிபூணுவோம்.  – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச்செய்திகள் ஓர் தொகுப்பு முக்கிய  அரசியல் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச்செய்திகள் ஓர் தொகுப்பு Reviewed by NEWS on June 16, 2018 Rating: 5