Jun 8, 2018

ஹக்கீம்-றிசாத் மாயையை விட்டு விலகிட அவர்களும் நீங்களும் தயாரா?(முதலில் எனக்கும் அப்பால் உங்களுக்கும்)
அன்பிற்குரிய இலங்கை வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.
அரசியல் என்பது சாக்கடை என்று நீங்கள் எத்தனை தடவை கூறியிருப்பீர்கள், ஆனாலும் காலத்துக்கு காலம் உங்கள் வாக்குகளை யாருக்காவது ஏதோ ஒரு காரணத்திற்காக எவரோ ஒருவருக்கு அளித்திருப்பீர்கள், அது உங்கள் உரிமையும் கடமையும் கூட, இவ்வுல வாழ்க்கையில்தான் இந்த வாக்கும் தலைவர்களும், அரசியலும் வக்காலத்தும். நாங்கள் முஸ்லிம்கள் ஈமான் கொண்டவர்கள் எங்களுக்கு மரணதிற்கு பிறகு ஓர் உலகு உண்டு அங்கு எல்லோரும் சமமே, அங்கு சுவர்க்கவாசிகள், நரகவாசிகள் என்ற வித்தியாசமே இருக்கும் அதை ஒரு போதும் மறந்து விடவேண்டாம்.
இந்த அடிப்படையில் இலங்கையில் முஸ்லிம்களுக்காக இரண்டு கட்சிகள் தெளிவாக அல்லது மறைமுகமாக இருக்கிறது, இதில் தனி முஸ்லிம் பெயருடன் முஸ்லிம் காங்கிரசும், மறைமுக பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இருக்கிறது, இது தவிர சிறுக சிறுக ஆங்காங்கே சில கட்சிகளும் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். அவர்களின் தாக்கத்தை விட அமைச்சர் ரிசாத் - அமைச்சர் ஹக்கீம் இருவரின் தாக்கம் அரசியலிலும் மக்கள் மத்தியிலும் மிக முக்கியமானது,
பல வருடங்களாக குரல் கொடுத்துவரும் மு.காவும், குறுகிய காலத்தில் பிரபலமாகி மு.காவுக்கு சவாலான அ.இ.ம.கா வும் ஏட்டிக்கு போட்டியாக மக்கள் சேவை புரிந்து வருகிறது,
இரு தரப்பினரும் முந்திந்கொண்டு சேவை செய்வது பாராட்டத்தக்கது அதே சமயம் இந்த அபிவிருத்திப் போட்டி அல்லது சேவை போட்டி ஏன் அஹ்லாக்குகளில் இருப்பதில்லை,
இரண்டு தரப்பினரும் முஸ்லிம்கள் நாங்கள்-நீங்கள் ஏன் இப்படி வலைத்தளங்களிலும், மேடைகளிலும், இதர ஊடகங்களிலும் ஏசிக்கொண்டும் சண்டை பிடித்துக்கொண்டும் இருக்கவேண்டும்?
அரசியல் என்ன குர்ஆன் - ஹதீஸா அல்லது தலைவர் பதவி நன்ன றசூலியத்தா?
இல்லயே குறைந்த பட்சம் 10 வருடம் அல்லது 15 வருடம் அரசியில் இருக்கப்போகிறீர்கள் அடுத்தமுறை பதவிகள் பறிபோகலாம் அடுத்த கனம் உயிர் கூட பறிபோகலாம் இதற்காகவா நாங்கள் வந்தோம் இந்த பூவுலகிற்கு?
அன்புள்ள அரசியல் போராளிகளே, மாற்றங்கள் உருவாவது மாற்றங்களை நாங்கள் செய்கிற போது, நாம் ஒருவருக்கொருவர் சண்டை பிடிக்காமல் வீண் வாதம் செய்யாமல் துாற்றாமல் இருந்தாலே நம் ஒற்றுமை உறுதியாகிவிடும், நாங்கள் பிரிந்து கிடக்கயில் பொதுபலசேனாவும், சிவசுனாவும் பலம் பெற்று விடுவர் அதனால் நமது அடையாளத்தை இழக்க நேரிடும் ஏலவே இழந்தது போதாதா?
மனம் விட்டு பேசுங்கள்!
ரிசாத் பற்றி புகழ்ந்து எழுதினால் - ஹக்கீமை துாற்றி எழுதினால் நீங்கள் கட்சியின் போராளியா அல்லது ரிசாதை துாற்றி ஹக்கீமை புகழ்நதால் போராளியா?
யாருக்கு யார் போராளி?
பதவிகளுக்காக பட்டங்களுக்காக நபிகள் நாயகம் காட்டிய சுன்னாவை அடகு வைக்கிறோமே தவறில்லையா? ரிசாத்-ஹக்கீம் போர் என்பது மாயை அவர்களும் நம்மை போல மனிதர்கள்தான்
நமது சுயஇலாபத்திற்காக நமது ஒற்றுமையை இழக்க தயாரா? இறைவனுக்காக இந்த றமழானிலிருந்தாவது ஆரம்பிப்போம், விமர்சனங்கள், துாற்றல்கள், இன்னோரன்ன தகராறுகளை தகர்த்து இரு அமைச்சர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் செல்லா விட்டாலும் ஒற்றுமையாக செல்ல வழிசமைக்க பாடுபடுவோம்.
கட்சி பேதம் மறந்து முஸ்லிம்கள் என்ற தொனியில் இருப்போம், அன்புள்ள இரு அமைச்சர்களுக்கும் ஓர் வேண்டுகோள் நீங்கள் ஒற்றுமை படாதவரை உங்கள் தொண்டர்கள் ஒற்றுமைப்பட மாட்டார்கள் அல்லாஹ்வுக்காக இணைந்து ஒற்றுமையாக செயற்படுங்கள் அல்லாஹ் உங்களுக்கு சுவனபதியை வழங்குவான் - ஆமீன்
பஹத் ஏ.மஜீத்
ஸ்தாபகர் சிலோன் முஸ்லிம்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post