சிவசேனாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய யார் தயார்? உதவ நாங்கள் தயார்!


அல்லாஹ்வின்  உதவியாலும்  திகன தெல்தெனிய பாதிக்கப்பட்ட மக்களின் மன தைரியத்தினாலும் சிங்கள இனவாதியும் பேஸ்புக் வீரருமான அமித் வீரசிங்க மற்றும் அவனின் சகாக்களினை ICCPR  சட்டத்தின் மூலம் பிணை வழங்க நீதவானுக்கு அதிகாரமில்லை என்பதை வழியுறுத்தி ஒவ்வொரு 14 நாட்களும் ஒரு தடவை நீதிமன்றத்திற்கும் ஜெயிலுக்கும் அலைய வைத்திருக்கிறோம்.
எல்லா குழப்பவாதிகளும் சிறையிலிருப்பதால் நின்மதியாக நோன்பை நோக்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ் .எமது சமூகத்திலிலுள்ள பிரச்சினையை சுமூகமாகத்தீர்க்கும்  அட்ஜஷ்ட் செய்பவர்கள் தமது சமரசப்பேச்சில் கோழைத்தனத்தைக்காட்டி அவர்களை விடுவிக்கும் வரை இன்ஷா அல்லாஹ் நின்மதியாக இருப்போம்.(பன்சல -பள்ளிவாசல் சமாதான பேச்சுவார்த்தை ஏற்பட்டு அது நீதிமன்ற செயற்பாட்டை பாதிக்காது  கண்காணிப்பது பாதிக்கப்பட்ட மக்களின் கடமையாகும்)
இதே போன்ற ஒரு நிலையை வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள. சில தமிழ் இனவாதிகளுக்கு எதிராக ICCPR சட்டத்தைப்பாவித்து 14 நாட்களுக்கு ஒரு தடவை நீதிமன்றத்திற்கும் ஜெயிலுக்கும் அலைய வைக்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த தைரியமுள்ளவர்களை தேடுகிறோம்.
இது ஒன்றும் பெரியவிடயமில்லை திருமலை ஹபாயாவுக்கு எதிராக பேசியவர்களுக்கும் . சாவகச்சேரியில் முஸ்லிம்களை மாட்டுக்கள்ளன்கள் என்று பேசியவருக்கும் எதிராக அந்தப்பிரதேச முஸ்லிம்கள் அந்த அந்த பிரதேச பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை செய்ய வேண்டும்.
பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொலிஸ்முறைப்பாட்டு ரிசிட்டின் இலக்கத்தை எமக்கு அனுப்பி வைக்கவும்.
இலங்கை அரசு ICCPR சட்டத்தை இலங்கையில் முறையாக நடை முறைப்படுத்தினால் தான் ஐரோப்பிய நாடுகள் GSP  மற்றும் GSP+ வரிச்சலுகையை இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் . எனவே  தற்போது இலங்கையின் அனைத்துத்துறைகளும் விரும்பியோ விரும்பாமலோ இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை பாவிப்போம் . இப்படியான இனவாதப்பேச்சினால் இலங்கையில் இன்னுமொரு இனப்பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதைத்தவிர்ப்போம்.
சட்டத்தரணி சறூக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்