அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களையடுத்து அப்பகுதிகளில் இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்காக அரசாங்க அதிபரினால் மதிப்பீட்டுக்குழு அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் தமது வீடுகளிலிருந்தும் வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்திருந்த பாதிக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு அதிகார சபை நஷ்டஈடு வழங்கவுள்ளது.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு வெளியிடங்களில் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்ததனால் அவ்வாறானவர்களால் நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்க முடியாமற்போயுள்ளது. இதுதொடர்பில் பலர் புனர்வாழ்வு அதிகார சபைக்கு முறையிட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இவ்வாறானவர்கள் புனர்வாழ்வு அதிகார சபையில் நஷ்டஈடு கோருவதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.
விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களுடன் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளரின் சிபாரிசுகளுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
Thanks: Vidivelli
2014 அளுத்கம தர்காநகர் நஷ்டயீடு: பதிவு செய்ய தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
Reviewed by NEWS
on
July 26, 2018
Rating:
