Jul 9, 2018

எல்லை மீள்நிர்ணயம்: 43 ஆக இருக்கும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 13 ஆக குறையும்எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழையதேர்தல் முறையின் படிமாகாணசபைத்தேர்தலை உடனடியாகநடாத்துமாறும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் பாராளுமன்றில் அறிவித்தார்.
தேர்தல் களைப்பிற்போட்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்காது மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்யநல்லாட்சித்தலைவர்கள் வழி வகுக்கவேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாகாண சபைஎல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பானஇன்றைய(07) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
பழையதேர்தல் முறையை மாற்ற வேண்டுமென்று எந்தவோர் எண்ணமும் அப்போது அரசிற்கு இருக்கவில்லை. மாகாணசபைத் தேர்தல்திருத்தச் சட்டத்தில் வேறொருவிடயத்தை உட்புகுத்தசட்ட மூல மொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தபோது,இந்தத் தேர்தலை பிற்போடவேண்டுமென்று எண்ணி ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர்கள், அவசர அவசரமாக புதியதேர்தல் முறைமாற்றத்தை அதற்குள்கொண்டு வந்துவாக்கெடுப்புக்கு விடநடவடிக்கை எடுத்தனர்.அந்தவேளை ஆட்சியின் பங்காளிக்கட்சியான அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் பிரதமரிடம் சென்று இது தொடர்பில்எமது தெளிவான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.
கடந்த காலங்களில் நமது தலைவர்கள்தான் இந்தநாட்டைக் குட்டிச்சுவராக்கினர்.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட முஸ்லிம்தலைவர்களும் அதன்பின்னரான முஸ்லிம்தலைவர்களும் தாய்நாட்டிற்கு எப்போதும்விசுவாசமாக இருந்ததோடு இந்தநாடுபிளவுபடுவதை என்றுமேஅ னுமதித்தவர்களும் அல்லர், துணைபோனவர்களும் அல்லர்.

அதுமாத்திரமின்றி இந்தநாட்டில்வாழும் முஸ்லிம்கள் நாட்டைச் சின்னா பின்னப்படுத்த வோநாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வோநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவோ எந்த வோர்கட்டத்திலும் எமதுதலைவர்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இடங் கொடுக்காதவர்கள் என்று நாம் கூறி எமது வேதனையைக் வெளிப்படுத்தினோம் எமது சமூகத்திற்கு ஏற்படவிருக்கும்அபாயத்தை அவரிடம் எடுத்துரைத்தோம்.
எனினும் நாங்கள் இந்தச்சட்ட மூலத்திற் குவாக்களிக்கும் நிலைக்கு அப்போது நிர்ப்பந்திக்கப்பட்டோம். இருந்தபோதும் அந்தவேளையில் சகோதரர் முஜீபுர்ரஹ்மான் உட்படநாங்கள் அனைவரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தோம்.
எங்களது கருத்துக்கள் உள்வாங்கப்படாது கொண்டு வரப்பட்ட இந்தசட்டமூலத்தில் எமது சமூகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் 50:50 என்ற விகிதாசாரத்தைக் கோரிநின்றோம். அதுமாத்திரமின்றி மீண்டும்2/3 பெரும்பான்மையுடன்தான் இந்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு முழுமையடையவேண்டு மென்றும் வலியுறுத்தி உடன்படவைத்தோம்.
இந்தச் சட்ட மூலத்தை எப்படியாவது பிற்போடவேண்டுமென்று நாங்கள் முயற்சியெடுத்தபோதும் காட்டிக்கொடுப்புக்களால் அதுமுடியாமல் போகவே அதற்கு ஆதரவளித்தோம்.
இலங்கையின் வரலாற்றிலே இரண்டு பெரும்பான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஆட்சிசெய்வது இதுவே முதற்தடவை. கடந்த காலங்களில் இவ்விரண்டு கட்சிகளின் முன்னையதலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காகவும் ஆட்சியைப்பிடிப்பதற்காகவும் எதிர்நிலைப்பாடுகளையே எடுத்தனர். அத்துடன் இனவாதங்களையும் மதவாதங்களையும் தூண்டி நச்சுவிதைகளை விதைத்துமக்களை பிரித்தாண்டனர்.
அதுமாத்திரமன்றி தமிழ்தலைமைகளும் சிலத வறுகளைவிட்டிருக்கின்றது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பின் 13வதுதிருத்தத்தைக்கூட அப்போது தமிழ் தலைவர்கள் ஏற்க மறுத்தமை வரலாறு. ஆனால் தற்போது வடக்கும் கிழக்கும் பிரிந்து அதிகாரங்கள் பகிர்ந் தளிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டபோது கிழக்குமாகாண முஸ்லிம்களிடமோ,
அவர்களின் பிரதிநிதிகளிடமோ கேட்கப் படாமலேயே அது நடந்துமுடிந்தது. அந்தநடை முறையை அன்றுதொடக்கம் இன்றுவரையிலான முஸ்லிம்தலைவர்கள் எதிர்த்தேவந்தனர். எங்களைப் பொறுத்தவரையில் மதரீதியாகவோ, பிரதேசரீதியாகவோ பிரிந்துவாழவிரும்பாத போதும் நாட்டுத்தலைவர்கள் விட்டதவறினால் நாங்களும் சமூகரீதியாகசிந்திக்கும் நிலைஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் 52 அமைச்சுக்களில் எந்தவொன்றிலும் முஸ்லிம் செயலாளர்கள்கிடையாது. 32 வருடங்களுக்குப் பிறகுமுஸ்லிம் ஒருவர்கடந்த சிலதினங்களுக்குமுன்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அதற்குப்பொறுப்பான அமைச்சருக்கும் நன்றிபகிர்கின்றோம். எமது சமூகவிகிதாசார அடிப்படையில் குறைந்தது 3 பேராவது அரசஅதிபராக இருக்கவேண்டும். எமது சமூகத்தைச்சார்ந்த35 பேர்சுப்ராதரத்தில் இருக்கின்றனர். அப்படியிருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.
புதிய தேர்தல் முறையில் மலையகச் சமூகம் முற்றாகப் பாதிக்கப்படுகிறது. அதேபோன்று முஸ்லிம் சமூகமும் பாரிய பாதிப்புக்குள்ளாகின்றது. தற்போது எமது சமூகத்தில் மாகாணசபை அங்கத்தவர்களாக இருக்கும்43 பேர், புதிய எல்லை மீள்நிர்ணயம்மூலம் 13 ஆககுறைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரைப்பெறுவதென்பது கேள்விக் குறியாகமாறியுள்ளது.
தவலிங்கம் தலைமையிலான எல்லை மீள்நிர்ணயஅறிக்கையில் மூன்று முறைகள் கூறப்பட்டுள்ளன. எல்லா முறைகளுமே சிறுபான்மை சமூகத்திற்கு ஆபத்தாகவே முடிந்திருக்கின்றது.
ஏதோ இலங்கையில் எந்தத்தேர்தல்முறையும் இல்லாதது போலஅவசர அவசரமாக இந்தத்தேர்தல் முறையைக் கொண்டு வந்ததன் நோக்கம்தான்என்ன?
உள்ளூராட்சித் தேர்தலில் பெற்றபடிப்பினைகள் நமக்குப்போதாதா?

புதிய தேர்தல் முறையின் மூலம்தான் இந்தத் தேர்தலைக் கொண்டுவரவேண்டு மென்று அரசாங்கமும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரும் ஏன்அடம்பிடிக்கின்றனர்? கடந்தயுத்தத்திலே,முஸ்லிம் சமூகம் ஈடுபாடுகாட்டாதபோதும் பாதிப்பிலும் அழிவிலும்,பொருளாதார நஷ்டத்திலும், இழப்பிலும் நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். கடந்த ஆட்சியில் எமது சமூகத்தின் மீது நடாத்தப்பட்ட அட்டூழியங்களை தாங்க முடியாமலேயே நல்லாட்சியைக் கொண்டுவந்தோம். சட்டத்தை மதகுருமார்கள் கையிலெடுத்து ஆடத்தொடங்கியதை கண்டும்காணாதது போலஅந்தஅரசு இருந்ததால்தான் புதிய ஆட்சியைக் கொண்டுவந்தோம். இந்த விடயத்தில்சிறுபான்மைச் சமூகம் அனைத்தும் ஒன்றுபட்டது. என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன் என்றுதெரிவித்தார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network