அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக எமது ஏழை மக்களை கேவலப்படுத்தும் கலாச்சாரத்தை அடியோடு துடைத்தெறிய வேண்டும்

Image result for வாக்குமக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று காண்பித்துக்கொண்டு அப்பாவி ஏழைகளின் வாக்குகளை சூறையாடுவதற்காக “வாழ்வாதாரம்” என்ற போர்வையில் அப்பாவி ஏழை மக்களை வரிசையில் காத்திருக்க செய்து, அதனை படம் பிடித்து, ஊடகங்கள் மூலமாக பெரும் எடுப்பில் விளம்பரம் செய்து, அரசியல் பிழைப்பு நடாத்துகின்ற அரசியல்வாதிகள் இந்த நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான அரசியல்வாதிகள் எந்த கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் எமது சமூகத்தின் சுய கௌரவம் மிகவும் முக்கியமானதாகும்.

மானம், வெட்கம், கெளரவம் என்பது எல்லோருக்கும் உள்ளது. அது பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் உரியதல்ல.

மக்களை வரிசையில் நிக்கவைத்து படம் பிடித்து காட்சிப்படுத்துகின்ற நீங்களும் கடந்த காலத்தில் வாழ்வாதாரம் பெற்ற குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.

ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் கட்டாயம் கொடுக்க வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ தனவந்தர்கள் தங்களது சொந்தப் பனத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தினை மிகவும் கௌரவமாகவும், இரகசியமாகவும் வழங்குகி வருகின்றார்கள்.

சில வங்குரோத்து அரசியல்வாதிகளைப்போல அவர்கள் படம் பிடிப்பதுமில்லை, ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் தேடுவதுமில்லை. அல்லாஹ்வுக்காக என்று நினைத்து வழங்குகின்றார்கள்.

ஆனால் எமது சமூகத்தில் இருக்கின்ற கறைபடிந்த அரசியல்வாதிகள் ஏழை மக்களின் அடிமட்ட வாழ்வினை உயர்த்த வேண்டும் என்றோ, அவர்களுக்கு சுயதொழில் வழிகாட்ட வேண்டும் என்றோ உதவி செய்ய முன்வருவதில்லை. 

மாறாக வாழ்வாதாரம் என்ற போர்வையில் தங்களது அனைத்து ஊடக பலத்தினையும் பாவித்து விளம்பரம் தேடி அதன்மூலம் மக்களின் வாக்குகளை சூறையாடி தேர்தல்களில் வெற்றி பெறுவதுதான் இவர்களது நோக்கமாகும். .

அதிலும் அரசியல்வாதிகள் வழங்குகின்ற வாழ்வாதாரமானது அவர்களது சொந்த பணத்தின் மூலகா அல்ல. அது அரசாங்கத்தின் பணமாகும். அதாவது மக்கள் பணமாகும்.

மக்கள் பணத்தினைக்கொண்டு மக்களுக்கு வாழ்வாதாரம் என்ற போர்வையில் சில உபகரணங்களை வழங்கினாலும், அரசாங்கம் வழங்குகின்ற பணம் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. அதில் ஏராளமான கொமிசனும், தரகுக்கூலியும் சூரையாடப்பட்டதன் பின்பு மிகுதி பணமே அப்பாவி ஏழை மக்களை சென்றடைகின்றது.

எனவே இனிவரும் காலங்களில் வாழ்வாதாரம் வழங்கும்போது பகிரங்கமாக மேடை போட்டு படம் பிடித்து மக்களை அவமானப்படுத்தாமல், உங்களது காரியாலயத்துக்கு அல்லது பிரதேச செயலகத்துக்கு அவர்களை வரவழைத்து, மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வாக்குகளுக்காக என்று நினைத்து வழங்காமல், அல்லாஹ்வுக்காக என்று நினைத்து வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத்து செய்வானாக.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக எமது ஏழை மக்களை கேவலப்படுத்தும் கலாச்சாரத்தை அடியோடு துடைத்தெறிய வேண்டும் அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக எமது ஏழை மக்களை கேவலப்படுத்தும் கலாச்சாரத்தை அடியோடு துடைத்தெறிய வேண்டும் Reviewed by Unknown on July 10, 2018 Rating: 5