வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" என்ற நூலின் அறிமுக விழா

பாறுக் ஷிஹான்

   வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும்  சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  நூலின் அறிமுக விழா அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள ரி.எப்.சி மண்டபத்தில் இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில்  திங்கட் கிழமை 23 ம் திகதி மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற  இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி  நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்   கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில்  முன்னாள் மாகாணஅமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹிர் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான அன்ஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றதுடன் நூலின் முதற் பிரதியை தொழில் அதிபர் எம்.ஜே.எம். ஜெரின் பெற்றுக்கொண்டார்.

அறிமுக உரையை கவிஞர் ரி.எல். ஜெளபர்கானும் வாழ்த்துரையை கவிஞர் கால்தீனும் நன்றியுரையை ஜுனைதீன் மான்குட்டியும் நிகழ்ச்சி தொகுப்பை பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூமும் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள் கல்விமான்கள் வர்த்தக பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடக வியலாளர்களும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...