மக்களின் ஒற்றுமையே அபிவிருத்திக்கு ஒரே வழி - காதர் மஸ்தான்


Related image


யுத்த வடுக்களினால் பல இன்னல்களைச் சுமந்து வாழ்ந்துவருகின்ற வடபுல மக்கள் இன‚ மத‚ கட்சி பேதங்களைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் வாழ்கின்றபோதே தமது எதிர்கால அபிவிருத்தியை முன்னெடுத்துச்செல்ல வழிகோலும். இன்று பொதுவாக எமது பிரதேசங்களில் இன‚ மத‚ கட்சி வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி  அதன்மூலம் குழப்பகரமான சூழ்நிலையொன்றை உருவாக்க பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்படக்கூடும்.  இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகளை தகர்த்தெறிதவன்மூலமே எமது இலக்கை வெகு விரைவாக அடைந்துகொள்ள முடியும் என பிரதியமைச்சர்  குறிப்பிட்டார்.

தற்போது சில விரும்பத்தகாத சக்திகள் எமது பகுதிகளில் உருவெடுத்து பண மூட்டைகளுடனும் பசப்பு வார்த்தைகளுடனும் வலம் வருகின்றன. இப்படியான சமூக அவசிந்தனையாளர்களிடம் யாரும் சோரம் போய்விடக் கூடாது. இவர்கள் ஒட்டுமொத்த மக்களையும் தவறான முறையில் பயன்படுத்தி தமது இலக்கை அடைய முனைப்புடன் செயற்படுகின்றனர்; என்றார்.

இன்று மீள்குடியேற்றம்‚ புனர்வாழ்வளிப்பு‚ வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காரியாலயத்தில் வைத்து ஊடகவியலாளர்; ஒருவர்; எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;.
அவர் மேலும் தெரிவிக்கையில்‚ இன்று பல வேலைத்திட்டங்கள் ஒரு கட்சி சார்;ந்ததாகவே காணப்படுகின்றன. ஏன் இப்படியான ஒரு மோசமான அரசியல் கலாச்சாரம் வன்னியில் உருவெடுத்துள்ளதென எனக்குத் தெரியவில்லை.

இன்னும் அரசியலைக் காரணம் காட்டி சகவாழ்வுடன் வாழ்கின்ற மக்களிடையே இன‚ மத வேறுபாட்டைக் கொண்டுவந்து குழப்பத்தை ஏற்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

 இவை அனைத்துக்கும் காரணம்‚ அவர்களிடம் காணப்படும் சுயநலம் எனும் ஒரு கொடிய நோயாகும். இந்த நோய்க்கான தீர்வு மக்களாகிய உங்களிடம் தான் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

வன்னி மாவட்டத்தின் மன்னார்‚ வவுனியா‚ முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது இன்னும் பூரணத்துவம் அடையவில்லை. எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை முழு முயற்சியுடன் பிரயோகித்து இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் தனது அமைச்சினால்‚ தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த வன்னி மாவட்டத்திற்கு செய்யப்போவதாகும் அதற்கான ஒத்துழைப்பை மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தனக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  ¡


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...