பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு எதி­ரா­கவும் ஆத­ர­வா­கவும் ஆர்ப்­பாட்­டம்எம்.எஸ்.சம்சுல் ஹுதா
 பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு எதி­ரா­கவும் ஆத­ர­வா­கவும் இரு வேறு குழுக்­க­ளினால் நேற்­றைய தினம் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
பிர­தேச செய­லா­ளரின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து  பிர­தேச செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள் நால்வர் பதா­தை­களை ஏந்­திய வண்ணம்  நேற்­றைய தினம் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
பிர­தேச செய­லாளர் சர்­வா­தி­கார முறையில் அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிக்­கிறார், உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளி­டத்தில் மனி­தா­பி­மான முறையில் நடந்து கொள்­வ­தில்லை, ஏற்­க­னவே செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டினை வைத்து அதி­காரப் பழி­வாங்­கல்கள், நான்கு வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட 80வீத­மான உத்­தி­யோ­கத்­தர்­களின் வரு­டாந்த சம்­பள ஏற்­றங்­களை கார­ணங்­க­ளின்றி இடை­நி­றுத்தி வைத்­துள்­ளமை உள்­ளிட்ட பல விட­யங்­களைக் கண்­டித்தே குறித்த உண்­ணா­வி­ர­தத்தை தொடர்­வ­தாக இதில் ஈடு­பட்ட சில உத்­தி­யோ­கத்­தர்கள் தெரி­வித்­தனர்.
இதே வேளை குறித்த கண்­டன போராட்­டத்தை எதிர்த்தும் பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு ஆத­ரா­வா­கவும்  பொத்­துவில் பிர­தேச சபைத் தவி­சாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத், பொத்­துவில் தொகுதி பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழு இணைத்­த­லைவர் ஏ.எம்.அப்துல் மஜீத், பிர­தேச சபை உறுப்­பினர் ஜமாஹிம், என்.எச்.முனாஸ் ஆகியோர் “பிர­தேச செய­லாளர் மீது பொய்க் குற்­றச்­சாட்டு சுமத்­தாதே”, “பிர­தேச செய­லாளர் முஸர்­ரத்­திற்கு சரி­யான முறையில் நிர்­வாகம் செய்ய வழி­விடு”, “பிர­தேச செய­லாளர் நேர்­மை­யான முறையில் சேவை செய்­த­தற்கு பரிசா ?”, “பொத்­துவில் மக்­க­ளுக்கு பிர­தேச செய­லாளர் முஸர்­ரத்தின் சேவை தேவை” என்ற ஆத­ரவு பதா­தை­களை ஏந்­திய வண்ணம் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் கலந்து கொண்ட உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு முன்னால் அமர்ந்து  ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
மேலும், இங்கு கருத்து தெரி­வித்த பொத்­துவில் பிர­தேச சபைத் தவி­சாளர் கூறு­கையில், பொத்­துவில் பொது­மக்கள் சார்­பாக இங்கு நாம் கலந்து கொண்­டி­ருக்­கின்றோம், பொத்­து­விலைச் சேர்ந்த நிர்­வாக சேவையைச் சேர்ந்த உத்­தி­யோ­கத்தர் பிர­தேச செய­ல­கத்­திலே பிர­தேச செய­லா­ள­ராகக் கட­மை­யாற்ற வேண்டும் என்­பதே எங்­க­ளது அவா­வாகும். இங்கு எந்த பொது­மக்­க­ளு­மின்றி இந்த நான்கு பிர­தேச செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள் மாத்­திரம் பிர­தேச செய­லா­ளரை மாற்ற வேண்டும் என­ஒரு துண்டுப் பிர­சு­ரத்தை அச்­சிட்டு வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள். இந்த துண்­டுப்­பி­ர­சுரத்தை வாசித்தால் புரியும், அவர்கள் அதில் குறிப்­பிட்ட விட­யங்­க­ளுக்கு அர­சாங்க அதிபர் உள்ளார், செய­லாளர் உள்­ளார்கள். ஆனால் பிர­தேச செய­லாளர் தவறு செய்­கின்றார், இலஞ்சம் பெறு­கின்றார் என்று ஏழை மக்­களை பிழை­யாக வழி­ந­டாத்த வேண்டாம். இலஞ்­சங்­க­ளையும் ஊழல்­க­ளையும் பிடித்துக் கொடுப்­ப­தற்கு ஆணைக்­கு­ழுக்கள் உள்­ளன, குறைந்­தது பொலிஸ் நிலை­யத்­தி­லா­வது முறை­யீடு செய்­யுங்கள். ஆனால் இங்கு கடமை­யாற்றும் இந்த நான்கு பேரும் தங்­க­ளது சுய­ந­லத்­திற்­காக வேண்டி செய்­வ­தா­கவே நாங்கள் கூறு­கின்றோம். காரி­யா­ல­யத்தில் இவர்­களை பற்றி விசா­ரித்த போது அலு­வ­ல­கத்­திற்கு சரி­யான நேரத்­திற்கு கட­மைக்கு சமுக­ம­ளிப்­ப­தில்லை, பகல் உண­வுக்கு மூன்று மணி நேரத்­திற்கு மேல­தி­க­மாக எடுப்­பது, தனியார் வகுப்­புக்கள் நடாத்­து­கின்­றமை என குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. எனவே, எங்­க­ளுக்கு எங்­க­ளது பிர­தே­சத்தைச் சேர்ந்த நிர்­வாக சேவையில் சித்­தி­ய­டைந்த பிர­தேச செய­லாளர் தேவை. உங்­க­ளது பிரச்­சி­னையை திணைக்­க­ளங்கள் ஊடாக தீர்த்துக் கொள்­ளுங்கள் எனத் தெரி­வித்தார்.
இது தொடர்பில் பொத்­துவில் பிர­தேச செய­லக செய­லாளர் என்.எம்.எம்.முஸாரத் அவர்­களைத் தொடர்பு கொண்ட போது, எனது அலு­வ­ல­கத்தில் கட­மை­யாற்றும் நான்கு உத்­தி­யோ­கத்­தர்கள் பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இவர்­க­ளது இந்த செயற்­பா­டா­னது  நியா­ய­மற்­ற­தாகும். ஒரு திணைக்­களத் தலைவர் என்ற வகையில் நான் ஒரு சில விட­யங்­களை அவ­தா­னித்து வந்­துள்ளேன். குறிப்­பாக குறித்த பணிப்­ப­கிஷ்­க­ரிப்பை தலை­மை­தாங்கி நடாத்தும் எமது அலு­வ­லக அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கடந்த ஆண்­டு­களில் 02 முறை கணக்­காய்வுக் குழு­வி­னரால் பகல் நேர சாப்­பாட்­டுக்குச் சென்று உரிய நேரத்­திற்கு சமு­க­ம­ளிக்­க­வில்­லை­யென எனது அவ­தா­னத்­திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கணக்காய்வு அதிகாரிகள் என்னைப் பணித்ததற்கமைய நாம் அவரை நெருக்கமாக அவதானித்து வந்தேன். சில நேரங்களில் அவரை அழைத்து நேரில் சொல்லியிருக்கின்றேன். ஆனால் இவ்வாறு கூறுவதால் தனக்கு மன உளைச்சலாக இருக்கின்றது எனக் கூறுகின்றார். இதற்கு நிர்வாகியாகிய என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. சரியான ஒரு நிருவாகத்தைக் குழப்பி அவருடைய காரியத்தை சாதிக்க முனைகின்றார் என்றார்.
பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு எதி­ரா­கவும் ஆத­ர­வா­கவும் ஆர்ப்­பாட்­டம் பொத்­துவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு எதி­ரா­கவும் ஆத­ர­வா­கவும் ஆர்ப்­பாட்­டம் Reviewed by NEWS on July 19, 2018 Rating: 5