Jul 29, 2018

இலங்கை முஸ்லிம்களுக்கு ஹக்கீம்தான் தேவை


இலங்கை முஸ்லிம்களுக்கு எத்தனை தலைமைகள் வந்தாலும் ஹக்கீம் எனும் ஒரு தலைமையும் தேவை காரணம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அவரின் அறிவும் ஆற்றலும், பேச்சுத்திறனும் பாராளுமன்றத்தை அதிரவைக்கும், அவரின் சாணக்கிய குணத்தால் தமிழ் அரசியல் தலைவர்கள் இன்னும் முஸ்லம்களை மதிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

எல்லோரையும் போல ஒரு சிறிய குடும்பத்து பின்னணியில் வந்த ஹக்கீம், மர்ஹூம் அஸ்ரபிற்கு ஆலோசனை வழங்கும் ஒருவராக இருந்தார், ஹக்கீம் தலைவரின் நம்பிக்கைகுரிய ஒரு ஆலோசகராக இருந்த காரணத்தினால் தேசியப்பட்டியலையும் தலைவர் அன்று அவருக்கு வழங்கினார்.

இன்று ஹக்கீம் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் இன்னுமின்னும் முஸ்லிம்களுக்கு சேவை செய்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது, அதே போல பதவிகளுக்கும் பட்டங்களுக்குமாய் சண்டை பிடித்து வெளியேறி செல்லும் துரோகிகள் கூட்டத்தினை நம்பும் ஹக்கீமையும் பாராட்ட வேண்டியுள்ளது.

காலம் தாமதித்தாலும் சொன்ன வாக்குறுதியை இன்னுமின்னும் நிறைவேறறும் அந்த குணத்தையும், தேசிய ரீதியில் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளையும் மேலும் மேலும் பாராட்ட வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு ஹக்கீம்தான் தேவை, என்று சொல்வதை காட்டிலும் ஹக்கீம் கட்டாயம் தேவை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post