தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 29, 2018

ஜனாதிபதியின் நன்மதிப்பை காதர் மஸ்தான் வென்றுள்ளதாக பைசர் தெரிவிப்புவன்னி மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் அவர்கள் சமூக உணர்வு மிக்க சிறந்ததொரு நிர்வாகியாவார்.

ஜனாதிபதியின் நன்மதிப்பை பெற்ற இளைஞர்களில் ஒருவர்,அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் அவரது மக்களைப்பற்றியதாகவே இருக்கிறது என உள்ளூராட்சி மாகாணசபைகள் விளையாட்டுத் துறை அமைச்சர் கெளரவ பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர்   தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது 

தமது பிரதேசங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக என்னை கெளரவ பிரதி அமைச்சர் கா தர் மஸ்தான் அவர்கள் அழைத்து வந்தார்.

அபிவிருத்தி பணிகளுக்கென்று அரசியல்வாதிகளால் நடப்பட்ட எத்தனையோ நடுகற்கல் காலத்தால் காணாமல் போன வரலாறுகளை நாம் காண்கிறோம்.

குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கென 
நிதி ஒதுக்கீட்டை செய்த பின் அடிக்கல் நாட்டு விழாக்களை நடாத்துகின்ற கலாச்சாரத்தினை நாங்கள் கைக்கொள்ள விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தனதுரையில் குறிப்பிட்டதாவது.

 இந்த நாட்டுக்கு பல கல்விமான்களை பரிசளித்த இந்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் கலங்கரை விளக்கமாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மாணவ சமூகம் இந்த கலாசாலையை நோக்கி அலையென தவழ்ந்து வந்தது.

 அந்தக் காலம் மீண்டும் வரவேண்டுமென நான் ஆசிக்கிறேன் .

இன்று தேசிய மட்டங்களிலும்  சாதனைகளை நிகழ்த்திய மாணவர்கள் எம்மிடமிருந்து பாரிசில் பெறுகின்ற பொழுது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த பாடசாலையின் மகளிர் விடுதி தேவை குறித்து எம்மிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இருபது மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதுடன் இந்த எருக்கலம்பிட்டி கிராமத்தின் மீனவர் கட்டிடத்திற்காக முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் குறிப்பிட்டார். 

பெருந்தொகையான ஊர்மக்கள் கலந்துகொண்ட இவ்விழாவினை இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages