Jul 29, 2018

தாராபுரத்து தங்கமகன் றிசாத் எனும் கடுகதி செயல்வீரன்அமைச்சர் ரிசாத் மீது எந்த காழ்ப்புணர்வும் எமது தளத்திற்கு இல்லலை ஆனால் எல்லோரும் சொல்வதை போல அவர் எனக்கு எதிரியுமல்ல, மனிதன் தவறுகள் செய்யக்கூடியவன் அந்த தவறுகள் சந்தர்ப சூழ்நிலைகளை பொறுத்து இடம்பெறும்  அத்தவறுகளை மீழ திருத்தாமல் இருப்பதே மிகப்பரும் தவறு - பஹத் ஏ.மஜீத் - பிரதம ஆசிரியர்/ஸ்தாபகர் 

இலங்கை முஸ்லிம்களுக்கு பல தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால் மர்ஹூம் அமைச்சர் அஸ்ரப் அவர்கள் எல்லாவற்றிலும் இராசியானவர், காரணம் அவர் தலைமை வகித்த காலப்பகுதி வித்தியாசமானது. முன்பிருந்த  தலைவர்கள் இருந்த காலப்பகுதிகள் போல் இருந்திருக்கில்லை, முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியான யத்த காலப்பகுதி. ஒரு பக்கம் ஈழ விடுதலைப்புலிகளின் தாக்குதல், இன்னுமொரு பக்கம் இந்திய இராணுவ தாக்குதல். இடையில் காட்டிக்கொடுப்புகள், மதஸ்தலங்கள் மீதான மிலேச்ச தனமான தாக்குதல் எல்லாமே முஸ்லிம்கள் என்ற ஓரே ஒரு காரணத்தினாலதான். இந்த இடத்தில் கட்டாயம் தலைமை ஒன்றிள் தேவை உணரப்பட்டது, சிலவேளை அஸ்ரப்க்கு பதிலாக யார் உருவாகியிருந்தாலும் அஸ்ரபிற்கு இருந்த அந்த  எதிர்பார்பு இருந்தே இருக்கும்.

மிகக்குறுகிய காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் மனங்களில் உட்காந்திருந்தார், அன்று பணப்பட்டுவாடா இருக்கவில்லை, தேர்தல்களை மக்களே நடாத்தினர், செலவு செய்தனர், தொழிலகள் விற்கப்படவில்லை உண்மையான போராளிகளுக்கு பகிரப்பட்டது. அபிவிருத்திகளுக்கு பஞ்சம் இருக்கவில்லை. உரிமைகள் மீறப்படவில்லை அதனை அஸ்ரப் விட்டுக்கொடுக்கவுமில்லை. அவர் மறைவுக்கு பின்னர் எல்லாமே மாறிவிட்டது.

உலதமயமாதல், Economic Poltics என்ற உல கோப்புக்கு அமைய இலங்கையிலும் அது மாறிவிட்டது, பிற்பட்ட கால தலைவர் அஸ்ரபுக்கு மாற்றமாக அனைத்தையும் செய்தனர். இது என்னுடைய குற்றச்சாட்டு அல்ல மக்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு. இந்தக்குற்றச்சாட்டுகள் தாண்டி அதாவது தடைதாண்டி தலைவனாக ஒரு இளைஞன் உருவாகிறான் அவன்தான் றிசாட் எனும் தடைதாண்டல் வீரன்.

வடக்கில் முஸ்லிம்களை வௌயேற்றிய போது, அதே கஸ்டத்துடன் மக்களுடன் மக்களாக எந்தவொரு வசதிகளுமின்றி கொழும்பு வந்த றிசாத் தலைவராக மாறி இன்று ஒட்டுமொத்த இலங்கைக்கும் அஸ்ரபின் பாணியில் சேவை செய்ய முடிந்தது என்றால் அது இலகுவான காரணமல்ல.

பாராளுமன்றத்தில் ஆசனங்கள், ஒரு கெபினட் அமைச்சு, ஒரு பிரதியமைச்சு, நாட்டின் நாலாபுறங்களிலுமுள்ள சபைகள் வசம், மாகாண சபையில் உறுப்பினர்கள், அதிகாரங்களில் அவர் கட்சிக்காரர்கள், போராளிகளுக்கு அரச தொழில், முக்கியஸ்தர்களுக்கு திணைக்கள தலைவர் பதிவகள், அதிவேக அபிவிருத்திகள், இலங்கை அரசியிலி்ல் முக்கிய வகிபாகம் என அனைத்தையும் எடுத்துக்கொண்ட றிசாத் ஓர் அடிமட்ட தொண்டன்.

இவன் சட்ட  முதுமானி அல்லது சட்டப்படிப்பு, அரசியல் முதுமானி, அரசியல் படிப்பு, கல்வி பெருந்தகை, வணிக ஜாம்பவானாக இருந்திருக்கவில்லை, முஸ்லிம் அரசியலை சரியாக செய்ய விரும்பிய அஸ்ரப் வழி தொண்டன் இதுவே அவன் வெற்றிக்கு காரணம் அனைவரையும் அரவணைக்கும் பண்பு. உதவும் குணம், பெருமையற்ற உள்ளம், எதைச் செய்யவேண்டும் என்ற நோக்கம், நல்ல ஆலோசகர் குழாம் அக்குழாமை மதிக்கும் தன்மை என என்ன பண்புகள் ஒரு அரசியல்வாதியிடம் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது. இதுதான் இந்த கடுகதி வேக வெற்றிக்கு காரணம்..

இனி அவரை நான் தாராபுரத்து தங்கமகன் றிசாத் எனும் கடுகதி செயல்வீரன் என செல்லமாக அழைப்பேன்.

பஹத் ஏ.மஜீத்
சிலோன் முஸ்லிம்


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post